பக்கம்:திரு. வி. க.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இ அச. ஞானசம்பந்தன்

தத்துவப்படி பொருள் மட்டும் சேர்ந்து விட்டால் என்ன நடக்கும் எனப் பெரியார் கூறுகிறார். பொருளின் ஆணவம் மனத்தில் எழவேண்டிய அருளையும் ஒட்டிக் கொலை, புலை, காமம், களவு, பொய், கள் முதலிய பாவம் நிதம் செய்யத் துண்டும். மனத்தில் தோன்றும் இப் பாவங்களைப் போக்க மார்க்கிஸத்தில் வழி கூறப்பெறவில்லை. வயிறு நிரம்பியவன். நிரம்பாதவன் ஆகிய இருவரும் செய்வதே இது. எனவே, இறையுணர்வுடன் கூடிய மார்க்கிலமே வேண்டும் என்கிறார். -

வையம் பொருளே தெய்வம் அருளே

மார்க்கிஸ் பொருளே காந்தி அருளே

ஒன்ற இரண்டும் உழைத்தல் நன்றே

எனும் பகுதி கூர்ந்து சிந்தித்தற்குரியது.

மார்க்கிஸ்த்தால் உடல் வாட்டும் பசியைத் தொலைத்து, காந்தியத்தால் உளம் வாட்டும் மறத்தைத் தொலைத்து ஒரு புதிய சமுதாயத்தை அமைக்கப் புகுந்தார் திரு. வி.க. தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் புதிய கருத்து ஒன்றைத் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தந்துள்ளார். சமயத்தில் ஊன்றியவர்

திரு. வி.க. அவர்கள் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து நூல்கள் பல எழுதியுள்ளார். ஏறத்தாழச் சிறியவும் பெரியவுமான ஐம்பது நூல்கள் எழுதியுள்ளார். எனினும், அவற்றுள் முப்பதுக்கு மேற்பட்டவை சமயத் தொடர்புடை யவை. எனவே, திரு. வி.க. என்ற மனிதர் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் செய்த தொண்டை இன்று ஆயும்பொழுது ஒர் உண்மை புலப்பட்டே தீரும். மார்க்கிஸத்தைப் போற்றிய அவர், இந்தியாவிலேயே முதலாவது தொழிலாளர் சங்கங் கண்ட அவர், பின்னைப் புதுமைக்கும் புதியவராக விளங்கிய அவர் முன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/48&oldid=695565" இலிருந்து மீள்விக்கப்பட்டது