பக்கம்:திரு. வி. க.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. ஒ 41

எந்நிலையில் நின்றிருப்பினும், எப் பணி புரிந்திருப்பினும், எக்கோலங் கொண்டிருப்பினும், தொடக்க முதல் இறுதி வரை சமயவாதியாகவே திகழ்ந்துள்ளார் என்பதுதான் அந்த உண்மை. சமயவாதி என்ற சொல்லை மணிமேகலை காலத்தி லிருந்து குறுகிய பொருளிலேயே பயன்படுத்தி வந்து விட்டோம். கடவுளை ஏற்காத ஒரு கூட்டத்தை விட்டுவிட்டு ஏதாவதொரு சமயத்தை மட்டும் நம்பும் ஒருவரைச் சமயவாதி என்று கூறுகிறோம். மேலும், மணிவாசகப் பெருமான் சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்” என்று கூறும்பொழுது முரட்டுப் பிடிவாதக்காரர்கள் நினைவே நமக்கு வருகிறது. திரு. வி.கவைச் சமயவாதி என்று கூறினவுடன் தயைகூர்ந்து இந்தப் பொருளை யாரும் நினைத்து இடர்ப்பட வேண்டா. வேறு சொல்லின்மையின் இச் சொல்லைப் பயன்படுத்து கிறேனே தவிர வேறு கருத்தில்லை. பொதுச் சமயவாதி

திரு. ‘.. சமயவாதி என்றால் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வினாத் தோன்றியே தீரும். சைவ சமய சாரம்’, ‘நாயன்மார் வரலாறு’, ‘பெரியபுராண உரை”, பட்டினத்தார் பாடல். உரை’, ‘முருகன் அல்லது அழகு’ முதலிய நூல்கள் எழுதியவரைச் சைவர் என்று குறிப்பதால் தவறில்லை. இத்தகைய நூல்கள் எழுதிவிட்டமையின் அவரைச் சைவர் என்று குறிக்கலாம் என்றால், அதனால் பெரும் பிழை நேரிடும். திருமால் அருள் வேட்டல்’, ‘தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூல்கள் எழுதினமையின் வைணவர் என்றும், கிறிஸ்துவின் அருள் வேட்டல்’, கிறிஸ்து மொழிக் குறள் என்ற நூல்கள் எழுதினமையின் கிறிஸ்துவர் என்றும், அருகன் அருகே எழுதினமையின் சமணரென்றும், ‘மார்க்கிலம் பற்றி எழுதினமையின் கடவுள் நம்பிக்கையே

1. திருவாசகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/51&oldid=695569" இலிருந்து மீள்விக்கப்பட்டது