பக்கம்:திரு. வி. க.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இ. அ.ச. ஞானசம்பந்தன்

அரசியல் வாழ்வில் பிறர் துயரம் களைய வேண்டிய தொழிலைக் கடமையாக வகுக்காமல் ஒருவரின் பரிவுக்கு (Mercy) வழியாக அமைப்பதிலும் இடர் பல உண்டு. வள்ளலார் இங்ஙனம் முடிவுக்கு வர ஒரு காரணம், சமுதாய நிலையில் நின்று உலகைக் காணாமல் ஆன்மிக நிலையில் நின்று உலகைக் கண்டதேயாகும். இவர் கண்ட சன்மார்க்கம்

திரு. வி.க. அவர்கள் கண்ட சமரச சன்மார்க்கம் சமுதாய அடிப்படையில் நின்று காணப்பெற்ற ஒன்றாகும். ஆதலால்தான் பெரியார் காரல் மார்க்ஸையும் காந்தியின் ஆன்மிகத்தையும் தம்முடைய சமரச சன்மார்க்கத்தில் இடம் பெறச் செய்கிறார். இந்த நெறியை அவர் வகுப்பதற்கு முன்னர் ஏற்பட்ட அவருடைய வளர்ச்சியைக் காண்டல் வேண்டும்.

மேனாட்டார் உதவி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி யவர் இப்பெரியார். ஆங்கிலம் அதிகம் கற்காவிடினும், தியாசாஃபிகல் சங்கத் தொடர்பாலும் அப்பொழுது நாட்டில் அதிகம் பேசப்பெற்ற சமதர்மக் கொள்கையாலும் ஈர்க்கப் பெற்றார். விஞ்ஞான அறிவு மேலைநாடுகளை ஆட்டிப் படைத்த அற்றை நாளில் அந் நாடுகளில் கடவுள் பற்றி ஆய்வு மிகுதியும் இட்ம் பெற்றது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி கடவுள் பற்றிய நீண்ட நாளைய கொள்கையை ஆட்டத் தொட்ங்கியது. சடப் பொருளையே சித்துப் பொருள் என்று கொண்டு பேசுவோர் மேனாடுகளில் மிகுந்தனர். இதன் எதிராக ஸ்ர் ஆலிவர் லாட்ஜ் போன்றவர்கள் சித்துப் பொருளின் உண்மையை நிலைநாட்ட அந்த விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினர். அங்கு நடந்த இந்தப் போராட்டம் நமது அறிஞரின் கவனத்தை அதிகம் கவர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/54&oldid=695572" இலிருந்து மீள்விக்கப்பட்டது