பக்கம்:திரு. வி. க.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. * 45

சடவாதம்

மேனாட்டாரைப் பொறுத்தவரை சடவாதம், உலகாயதம் என்பன புதுமையானவையாக இருக்கலாம். ஆனால், இந்த நாட்டைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே இவ் வாதம் இருந்து வந்தது. இதனை ஏற்று, மறுத்து, இதன் மேல்தான் நம்மவர் ஆன்மிக வாதத்தைத் தொடர்ந்தனர். அறிவின் துணை கொண்டு செய்யப் பெற்ற நம்மவருடைய வாதங்களில் எத்துணையோ கருத்துகள் தர்க்க முறையில் நேரடி வாதமாகப் பேசப் பெறாமல் பொருள்பொதி கதைகளாகப் (Parables) பேசப் பெற்றன. பிற்காலத்தில் இக் கதைகளின் உட்பொருள் மறைந்து வெறும் கதைகள் மட்டும் எஞ்சின. புராண வரலாறுகளை எடுத்துப் பேசுவோர் நிறைந்து இருந்தமையின் இக் கதைகள் செவிவழியாக இறங்கின. நாளாவட்டத்தில் இக் கதைகளைக் கேட்டவர்கள் கதைகள் எந்த உண்மையை அறிவுறுத்தத் தோற்றுவிக்கப் பெற்றனவோ அந்த உண்மை களை மறந்து கதைகளை அப்படியே நம்பத் தொடங்கி விட்டனர். இக் கதைகளே பெரிய இழுக்கை உண்டாக்கி விட்டது. இக் கதைகளை அப்படியே நம்புபவர்கள் மட்டுமே சமயவாதிகள் என்றும் ஏனையோர் சமய விரோதிகள் என்றும் கருதப் பெற்றனர். பழமையில் புதுமை

விஞ்ஞானத்தையும் அறிந்துகொண்டு, சர் ஆலிவர் லாட்ஜையும் அறிந்துகொண்டு, நம்முடைய பழமையான சமயத்தையும் நன்கு அறிந்துகொண்டு ஆராய்ச்சியில் இறங்கிய திரு. விகவுக்கு வியப்பும் வருத்தமும் ஒருங்கே எழுந்தன. எத்துணைப் பெரிய விஞ்ஞான உண்மைகளை நம்மவர்கள் பன்னெடுங்காலம் முன்பே அறிந்து கூறியிருப்பவும் அதன் அருமையறியாது இருந்துவிட்டோமே என அவர் அங்கலாய்க்கத் தொடங்கினார். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/55&oldid=695573" இலிருந்து மீள்விக்கப்பட்டது