பக்கம்:திரு. வி. க.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அ.ச. ஞானசம்பந்தன்

கிறிஸ்தவ நண்பர்கள் பல சமயம் நல்லெண்ணத்தாலும் சில சமயம் எள்ளும் நோக்கத்தாலும் அவருடைய சமயக் கதைகளின் உள்ளுறை அறியாமல் எள்ளி நகையாடினர். அவர்களுடைய சமயங்களைப் பொறுத்தமட்டில், நம் நாட்டுச் சமயங்கட்கிருப்பதுபோல் சாத்திரப் பகுதியும் தோத்திரப் பகுதியும் அதிகம் இல்லை. பிறர் தம் சமய தத்துவங்களில் குறை காண்கையில் அதற்கேற்ற விடை தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சடம் அழிவற்றது

புதிதாகக் கிடைத்த ஆங்கில விஞ்ஞான அறிவைக் கொண்டு நம்முடைய பழைய சாத்திரங்களையும்

கதைகளையும் ஆராய முற்பட்டார் அறிஞர். உதாரணமாக ஒன்று கூற விழைகிறேன். விஞ்ஞானப் பொருள்களை ஆய்ந்து ஆய்ந்து முடிவில் அவை அணு வடிவுடையன என்று இறுதியாக உள்ள சடப்பொருள் (Matter) அழிக்கப்பட (ipt tunggi 676rgyib G gsr (Indestrucibility of Matter) er i'r பொருள், சக்தி என்ற இரண்டுபற்றி (Matter and Energy) சர் ஆலிவர் லாட்ஜ் போன்றவர்கள் ஆய்வுரை வெளியிட்டனர். சைவ சித்தாந்தத்தில் ஊறித் திளைத்திருந்த திரு. வி.கவிற்கு, அதுவரை வெறும் சொல்லலங்காரமாக இருந்த சத்காரிய வாதம், சத்தி, சிவம் என்பன புதிய காட்சி நல்கத் தொடங்கின. ‘உள்ளது போகாது இல்லது வாராது என்று கிளிப்பிள்ளைபோல் சத்காரிய வாதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வியக்கும் முறையில் சடப்பொருள் மாற்றமடையுமே தவிர அழிக்க முடியாததாகும் என்ற விஞ்ஞான தத்துவம் ஒளி காட்டியது போல் இருந்தது. திருமால் பத்து அவதாரங்களை எடுத்தார் என்றும் அவை இன்னஇன்ன என்றும் புராண வரலாறு கூறிற்று. அதனை அப்படியே மக்கள் நம்பவேண்டும் என்று பெளராணிக மதம் விரும்பிற்று. ஞானநூல் ஆராய்ச்சியும் விஞ்ஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/56&oldid=695574" இலிருந்து மீள்விக்கப்பட்டது