பக்கம்:திரு. வி. க.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 47

அறிவுமுடையார் இக் கதைகள் உட்பொருளுடைய கதைகள் (Symbolical stories) 6T6 TL1605 a 600rstrst. கூர்தல் அறம்

இந் நிலையில் டார்வினின் கூர்தல் பரிணாமக் @5moro (Theory of Evolution) 2-6956i, LIGsgi. Gupou நாடுகளைப் பொறுத்தவரை இக் கொள்கை அவர்களுடைய சமயக் கொள்கைகளை ஆட்டங் காணச் செய்தது. மேனாட் டுச் சமயவாதிகள் டார்வினின் கூர்தல் கொள்கைக்கு விடை கூற முடியாமல் அவர்மேல் சீறிப் பாய்ந்தனர். திருமால் அவதாரங்கள் பற்றிய கதைகள் இப்பரிணாமக் கொள்கை யுடன் எவ்வளவு ஒத்துப் போகின்றன என்பதை அறிஞர் கண்டார். அன்றியும், மணிவாசகப் பெருமான் புல்லாய் பூடாய் என்ற முறையில் தொடங்கி, அம்முறையில் முன்பின்னாகவேனும் மனிதரை வைத்தமுறை அறிஞர்க்கு வியப்பை அளித்தது. டார்வின் தோன்றுதற்கு எத்துணை ஆயிரமாண்டுகட்கு முன்னர்த் திருமால் அவதாரக் கதைகள் தோன்றின. அவர்க்கு ஓராயிரம் ஆண்டின் முன்னரே மணிவாசகர் உயிர் வைப்பு முறையைப் பாடிச் சென்றார். டார்வினுக்கு ஈராயிரம் ஆண்டின் முன்னர்த் தோன்றிய ஆசிரியர் தொல்காப்பியனார் ஓரறிவுயிர் முதல் ஆறறி வுயிர்கள் வரை வகைப்படுத்திப் போனார்.

திருமால் அவதாரங்கள்

இவற்றையெல்லாம் அறிந்த கூர்த்த மதியினராகிய நம் பெரியார் அந்த விஞ்ஞான அறிவை நம் சமயங்களை ஆராய்வதில் பயன்படுத்தினார். டார்வின் கொள்கைபற்றி யும் திருமால் அவதார முறைபற்றியும் தமிழ்நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் இதோ பேசுகிறார்:

“அவதாரங்களைப் பற்றி ‘யான் பன்முறை சிந்திப்பதுண்டு; ஆராய்வதுண்டு. சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் எனக்கு டார்வின் கொள்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/57&oldid=695575" இலிருந்து மீள்விக்கப்பட்டது