பக்கம்:திரு. வி. க.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. அச. ஞானசம்பந்தன்

உறுதி ஏற்பட்டு விட்டது. டார்வின் முதலியோரை நாத்திகர் என்று தள்ளுதல் அறிவுடைமையாகாது. அவர்தம் ஆராய்ச்சித் திறன்கள், நம் பெரியோர் கண்ட அனுபவங்களுக்கு எவ்வெவ் வழியில் அரண் செய்கின்றன என்று பார்ப்பது அறிவுக்கு அழகு. டார்வின் முதலிய பேரறிஞர் கண்ட பல உண்மைகள், நமது நாட்டில் பல புராணக் கதைகளாக நிலவி வருகின்றன. புராணக் கதைகளை உள்ளவாறே கொள்வது பெளராணிக மதமாகும். ஞான நூல் ஆராய்ச்சியுடையவர் புராணக் கதைகளை அப்படியே கொள்வதில்லை. அவர், கதைகளின் உட்கிடக்கை களைக் காணவே முயல்வர். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவடைவது சிறப்பு.

உலகை நோக்குவோம். தாவரம் முதல் மக்கள் ஈற்ாக உலகம் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். தாவரம் முதல் மக்கள் ஈறாக உள்ள யாவும்.உயிர்களே. அவை உடலமைப்புக்கேற்ற வண்ணம் அவ்வவ்வுயிர் அறிவு விளக்கம் பெறுகிறது. இது பற்றியே முன்னோர், உயிர்களை ஒரறிவுமுதல் ஆறறிவு வரை வகுத்துக் காட்டினர்போலும். உயிர்களின் அறிவு உடலமைப்புக் கேற்ற வண்ணம் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். அவ் வளர்ச்சி புதிய ஒன்றிலிருந்து உறுவதில்லை. வளர்ச்சி, உள்ளத்திலிருந்து உறுகிறது. இது கூர்தல் (Evolution) எனப்படும்- கூர்தல்உள்ளது சிறத்தல்). இக் கூர்தல் நியாயப்படியே டார்வின், உயிர் வரலாற்றை விளக்கிப் போந்தனர்.

நம் நாட்டவர் கொண்டுள்ள அவதாரங்களைப் பார்ப்போம். அவை மச்சத்தினின்றும் தொடங்கு கின்றன. ஒவ்வொன்றும் படிப்படியே வளர்ந்து வருதல் கருதற்பாலது. மச்சம் நீரில் வாழ்வது. அது நிலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/58&oldid=695576" இலிருந்து மீள்விக்கப்பட்டது