பக்கம்:திரு. வி. க.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அச. ஞானசம்பந்தன்

“மருவூர் கணேச சாஸ்திரியார் நடுப்பட்ட ணத்தில் சிவகீதை சொல்வர்; சூளையில் நீலகண்ட பாடியஞ் சொல்வர்; வெவ்வேறிடங்களில் வெவ்வேறு நூல்கள் சொல்வர். அவ்வவ்விடத்துக்கு யான் செல்வேன். வான்மீகி இராமாயணம், வியாசபாரதம், தக்கவரால் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் என்னைக் காணலாம். பகவத்கீதை பலரிடங்

கேட்டேன் - அயோத்தி தாஸ் பண்டிதரால் திரிபிடகமும் வேறு நூல்களும் போதிக்கப் பட்டன.- அப்துல்கரீம் என்பவர் அங்கே

வருவர்; அவர் ஒரு மெளல்வியின் புதல்வர்; திருக்குரான் ஒதியவர். அவர் திருக்குரானை வாசித்துத் தமிழில் பொருள் கூறுவர் ----- சிங்கார வேல் செட்டியார் டார்வின் கண்ட உண்மை யையும் பிறர் கண்ட நுட்பங்களையும் அறிவுறுத்துந் தொண்டில் ஈடுபட்டார்-***

யான் மாணாக்கனாயிருந்து பைபிள் படித் தேன்.--

மேனாட்டறிவு சமயத்திற்கு ஆக்கம்

சமய உலகில் இத்துணை ஆர்வத்துடன் நுழைந்த திரு.வி.க. எவ்வாறு பிற துறைகளில் இறங்கினார். அவ்வாறு அவர் சென்றது சமயத்துறை ஆராய்ச்சிக்கு ஆக்கந் தந்ததா அன்றிக் கேடு சூழ்ந்ததா என்பதுபற்றி அவரே பேசுகிறார் தம் ‘வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில்.

“எனது வாழ்க்கை, தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால் பல சமய ஆராய்ச்சிப் பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை

  • வாழ்க்கைக் குறிப்புகள், பக்கம் 103. t'வாழ்க்கைக் குறிப்புகள், பக்கம் 203.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/62&oldid=695581" இலிருந்து மீள்விக்கப்பட்டது