பக்கம்:திரு. வி. க.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 53

உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களில் அடிப் படையாயுள்ள பொதுமை-சமரசம்-ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன்; சிற்சில போது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவ தில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கஞ் செய்தது. அவ்விளக்கம், பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்தவல்லது காரல் மார்க்ஸ்’ கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது.

‘காந்தியடிகளின் அஹிம்ஸா தர்மத்தில் என் மனம் சென்றது. அஹிம்ஸை நல்லதே. அது வெறும் தத்துவ உலகிலும், கவி உலகிலும் நிலவிக் கொண்டி ருக்கும்; வாழ்க்கை உலகில் ஒன்றி நிலவுமா? என்று ஐயுறுவேன். சிலவேளை ஐயம் முனைந்தெழுந்து என் நெஞ்சைத் துளைக்கும். துளைப்பு, சிற்சில சமயம் மனநோயையும் உண்டுபண்ணும். அந்நோயைப் போக்க மார்க்ஸ் மருத்துவராய் என் மாணத உலகில் தோன்றுவர். மார்க்ஸ் அருளியுள்ள கொள்கை உலகில் பரவினால் வாழ்க்கை அஹிம்சையில் ஒன்றுவதாகும். என்னும் நுட்பம் எனக்குச் செவ்வனே விளங்கியது.

ஒரே வயிற்றில் பிறந்தவர் பொருளைக் குறித்துப் போரிடுவதும், மன்றம் ஏறுவதும் என் உள்ளத்தைப் புண்படுத்தும். உடன் பிறந்தவரிடத்தில் போர் மூட்டாத- அவரை மன்றம் ஏற்றாத-ஆட்சிமுறை அமையுமா என்று ஏக்கறுவேன். மார்க்ஸ் நினைவு அவ்வேகத்தைப் போக்கும். அமைதி நினைவு தோன்றும் போதெல்லாம் மார்க்ஸ் நினைவும் உடன் தோன்றும் வழக்கமாகியது.

மார்க்ஸ் கொள்கைக்கு ஆக்கந் தேடும் அமைப்பு தொழிலாளர் இயக்கம். அவ்வியக்கத்தில் இறங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/63&oldid=695582" இலிருந்து மீள்விக்கப்பட்டது