பக்கம்:திரு. வி. க.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இ. அ.ச. ஞானசம்பந்தன்

தொண்டு புரியக் கீர் ஹார்டியின் காட்சியும், வெங்கடேச குணாமிர்த வருஷணி சபை'யின் அழைப்பும் துணைநின்றன. வாழ்க்கையில் என்ன்ென் னவோ மாறுதலும் வளர்ச்சியும் நிகழ்கின்றன: அவ்விசித்திரத்தை யான் என்ன என்று விளம்புவேன்?

“மார்க்ஸியம் பொருட் பொதுமையே அறிவுறுத்தும் நாத்திகமன்றோ?’ என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. மார்க்ஸியம் என்று சிலர் நாத்திகப் பிரசாரஞ் செய்வதும் எனக்குத் தெரியும். என் மனத்துக்கு மார்க்ஸியம் நாத்திகமாகத் தோன்ற வில்லை எப்படி?

மகமதுவின் தெய்வ ஒருமையும், கிறிஸ்துவின் அன்பும், புத்தர் தர்மமும், அருகர் அஹிம்ஸையும், கிருஷ்ணன் நிஷகாமியமும், குமரன் அழகும், தட்சிணாமூர்த்தியின் சாந்தமும், பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை. அப்பொதுமை அறம் ஏன் ஓங்கவில்லை ? சில தடைகள் மறிக்கின்றன. அவை யாவை? சாம்ராஜ்யங்கள், மடங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள், கண்மூடி வழக்க வொழுக்கங்கள் முதலியன. இவற்றைப் படைத்து வளர்ப்பது எது? முதலாளி-தொழிலாளி வேற்றுமை. இவ் வேற்று மையை ஒழிக்கவல்லது பொருட்பொதுமை. பொருட் பொதுமை மகமதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் பிறவும் மன்பதையில் கால் கொள்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நுட்பம் எனக்குப் புலப்பட்டது. அதனால் மார்க்ஸியம் என் உள்ளத்தைக் கவர்ந்தது.

உலகம் போராட்டத்துக்கு இரையாதல்

கண்கூடு. முலம் என்ன? இது குறித்துத் தனித்தனி ஆராய்ச்சி செய்தவர் பலர். அவருள் சிறந்தவர் காரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/64&oldid=695583" இலிருந்து மீள்விக்கப்பட்டது