பக்கம்:திரு. வி. க.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அச. ஞானசம்பந்தன்

பயன்படுத்தும் இயக்கங்களில் என் மனம் ஈடுபடுவ தில்லை.

மார்க்ஸியம் முழுமையதா? குறையுடையதா? எதிலுங் குறையுண்டு. மார்க்ஸியத்திலுஞ் சிறு குறையுண்டு. என்ன குறை? அதன்கண் சத்’ என்னுஞ் செம்பொருள் வெளிப் படையாகக் காணப்படாமை. மார்க்ஸியத்தில் சத்’ என்னுஞ் செம்பொருள் சேர்ந் தால் அது நிறைவுடையதாகும்.

மார்க்ஸியம் சமதர்மத்தை அறிவுறுத்துவது. சம தர்மத்தில் ‘சத் தானே சேரும். சத்தைக் கொண்ட சம தர்மமே சன்மார்க்க மென்பது. சன்மார்க்கம், எது? மார்க்ஸியமும், மகம்மது, கிறிஸ்து, புத்தர், அருகர், கண்ணபிரான், குமரன், தட்சிணாமூர்த்தி முதலியோர் கொள்கையுஞ் சேர்ந்த ஒன்று சன்மார்க்கம். இஃது எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அனுபவங்களி னின்றும் கனிந்த உண்மை.”

இக்கருத்துகளை அவர் வாய்மொழியாகவே அறிந்த பிறகு அவருடைய அறிவு பணிபுரிந்த வகையை ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு அவருடைய சமய அறிவு வளர்ச்சி எவ்வாறு பரிணமித்தது என்பதைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். இவ்வளர்ச்சியில்தான் திரு.வி.க.வின் முழு வடிவத்தையும் காண முடிகிறது. இங்கே யான் கூறப் போகின்றவை அவர் எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுபவை. தேவைப்பட்ட இடங்களில் மேற்கோள் களை அவருடைய நூல்களிலிருந்து எடுத்துத்தர விழை கின்றேன். -

  • வாழ்க்கைக் குறிப்புகள், பக்கம் 579 முதல் 582 வரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/66&oldid=695585" இலிருந்து மீள்விக்கப்பட்டது