பக்கம்:திரு. வி. க.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 57

மனிதனுடைய தோற்றம், வாழ்வு, பிற உயிர்களோடு அவனுக்குள்ள தொடர் என்பவைபற்றிய ஆராய்ச்சி மேனாடுகளில் மிகப் பிற்காலத்தில் தோன்றியது. சென்ற இரு நூற்றாண்டுகளில் இவ்வாராய்ச்சி தோன்றினும் மிக வேகமாக முன்னேறியுள்ளது என்பதை மறுத்தல் இயலாது. ஆனால், உயிர் வருக்கம் முழுவதும் தொடர்புடையன என்பதையும் எடுக்கும் உடலுக்கேற்ப அவை அறிவு விளக்கம் பெறுகின்றன என்பதையும் இந்நாட்டவர் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே அறிந்திருந்தனர். மனிதன் விலங்கி லிருந்து தோன்றினான் என்பதை மேனாட்டு விஞ்ஞானி யரும் கீழை நாட்டுச் சமயவாதிகளும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வாறு தோன்றிய மனிதருள்ளும் அவரவர்கள் விலங்கி லிருந்து எத்துணைத் தூரம் கடந்து வந்துள்ளனரோ அத்துணைத் தூரம் அறிவு விளக்கம் பெறலாயினர். இவை பற்றி நம் பெரியார் ‘முருகன் அல்லது அழகு என்ற நூலில் விளக்கமாகப் பேசுவதைச் சற்றுக் காண்டல் வேண்டும்.

“மலையிடை மக்கள் நல்வாழ்வு செலுத்தப் புகு முன்னர் மக்கள் எப்படி இருந்தார்கள்? மக்கள் தோற்ற வரலாற்றை ஆராய்ந்தால் பலதிற உண்மைகள் போதரும். மக்கள் தோற்ற வரலாற்றைப்பற்றிச் சமய நூல்கள் பலவாறு பகர்கின்றன. அவை நம்பிக்கை யுலகுக்கு உரியனவாம். இயற்கைத் துணை கொண்டு ஆராய்ந்து முடிவு கண்ட அறிஞர் மக்களின் மூதாதைகள் விலங்குகளென்று கருதுகின்றனர். மக்களுலகின் தோற்றுவாய்க்கு நிலைக்களன் விலங்கு உலகம் என்பது அக் கூர்த்தமதியினர் ஆராய்ச்சியிற் போந்த உண்மை. இவ்வாராய்ச்சியிற் புகுந்து பன்னெடு நாள் உழைத்துப் பலதிற நுட்பங்களை உலகிற் குணர்த்திய ஹெக்கல், டார்வின் முதலிய பேரறி ஞர்க்கு உலகங் கடமைப்படுவதாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/67&oldid=695586" இலிருந்து மீள்விக்கப்பட்டது