பக்கம்:திரு. வி. க.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 59

தேயும் அளவினதாக மூளையின் வன்மை அருகி மென்மை பெருகும். மென்மை அளவாக அறிவு விளக்கமுறும். சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உள்ஸ்ரீப்புகட்கும், சில நூறு ஆண்டு கட்கு முன்னர் இருந்த மக்களின் உள்ஸ்ரீப்புகட்கும், இப்போதைய மக்களின் அவ்வுறுப்புகட்கும் வேற்றுமை உண்டு. இப்பொழுதுஞ் சில உள்ஸ்ரீப்புகள் பயனின்றிக் கிடக்கின்றன என்று மருத்துவ அறிஞர் கருதுகின்றனர். இவ்விரிந்த ஆராய்ச்சியில் ஈண்டு நுழைய வேண்டுவதில்லை. விலங்கினின்றும் பிறந்த மகன் எப்பொழுது கடவுள் உணர்வு பெற்றிருப்பான் என்பதொன்றே ஈண்டு நமக்குத் தேவை.

விலங்கினின்றும் தோன்றிய மகன், வடிவான் விலங்கொடு வேறுபட்டு விளங்கினும், உணர்வால் நீண்ட நாள் அதனோடு வேறுபடாமலிருந்தான். பின்னைப் பல் முதலியன தேய்வுற, உணர்வானும் அவன் விலங்கினின்றும் வேறுபடலானான். ஆகியும் மகன் இன்னும் விலங்குணர்வினின்றும் முற்றும் விடுதலையடைந்தானில்லை. விடுதலையடையாமை யான் அவன் இனத்துள் இரு பிரிவு தோன்றலாயின. ஒன்று மாக்கள் இனம்; மற்றொன்று மக்கள் இனம். மாக்களாவார் விலங்கையொத்த ஐயறிவுடையார்; மக்களாவார் ஆறறிவுடையார் மாவு மாக்களும் ஐயறி வினவே”, ‘மக்கள் தாமே ஆறறிவுயிரே என்றார் தொல்காப்பியனார். அம்மாக்களும் மக்களுஞ் சேர்ந்த ஒன்றே மன்பதை என்பது.

- ஆறாவது அறிவு எது; அவ்வறிவே கடவுள் உணர்வெனும் அன்பு நெறி விளக்கத்துக்கு நிலைக் களனாயிருப்பது. அவ்வறிவு விளங்கிய மக்கள், அவ்வறிவு விளங்காத மாக்களினின்றும் பிரிவுற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/69&oldid=695588" இலிருந்து மீள்விக்கப்பட்டது