பக்கம்:திரு. வி. க.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சென்னைப் பல்கலைக் கழகத்தார் பேராசிரியர் கல்கியின் நினைவாக ஒரு நிதியை ஏற்படுத்திக் கல்கி நினைவுச் சொற்பொழிவுகள் என்ற தலைப்பில் சொற்பொழிவுகளை நிகழ்த்து மாறு செய்துவருகின்றனர். அம்முறையில் 1967ஆம் ஆண்டுக்குரிய சொற்பொழிவுகளை ஆற்றுமாறு என்னைப் பணித்தனர். 1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3, 4, 5 ஆகிய நாள்களில் சென்னைப் பல்கலைக் கழக அறை ஒன்றில் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் தலைமையில் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற்றன.

தமிழ் முனிவர் திரு. வி.க. அவர்களுடன் இளமைக் காலந்தொட்டே மிக நெருங்கிய முறையில் தொடர்பு கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். ஒரளவு தமிழ்ப் பயின்று சொற்பொழிவாற்ற முன்வரும் இளைஞர்களை ஊக்கிவிடும் பரந்த பண்பு ஏறத்தாழ 40 ஆண்டுகளின் முன்னர் தமிழ் அறிஞர் பலரிடத்தில் இருந்ததில்லை என்றே சொல்ல லாம். இளைஞர்களைப் பார்க்கும்போது அவர்கள் கல்வியைத் தம்முடைய கல்வியோடு ஒப்பிட்டு எள்ளி நகையாடிய காலம் அது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் ஆண்டால் முதிர்ந்திருப்பினும் உள்ளத்தால் இளைஞராய், இளைஞர் உலகத்தோடு பெருந் தொடர்பு கொண்டு, மிகச் சிறந்த முறையில் அவர்களை ஊக்குவித்துத் தமிழ்ப் பணியையும் சமயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/7&oldid=695589" இலிருந்து மீள்விக்கப்பட்டது