பக்கம்:திரு. வி. க.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அச. ஞானசம்பந்தன்

போழ்து, அவர்களிடை (மக்களிடைக் கடவுள் உணர்வு அரும்பியிருத்தல் வேண்டும். அக்கடவுள் உணர்வே மக்களையும் மாக்களையும் வேறுபடுத்துவ தென்க. மக்களிடையே கடவுளுணர்வு, அவர்கள் மலையிடை மட்டும் வாழ்ந்த போது தோன்றின மையால், அவர்கள் கடவுளைக் குறிஞ்சி கிழான் மலை கிழவோன்’ என்று போற்றினார்கள் போலும் “.

அச்சத்திலிருந்து

மலையிடைத் தோன்றிப் பன்னெடுங் காலம் ஆன பிறகு மாக்கள் நிலையை விடுத்து மக்கள் நிலையை அடைந்த மனிதன் அதற்கும் நெடுங்காலம் கழித்தே கடவுள் அறிவு பெற்றிருத்தல் கூடும். முதன் முதலாகக் கடவுளறிவை எவ்வாறு மனிதன் பெற்றிருப்பான்? தன்னினும் மேம்பட்ட இயற்கையினிடத்துக் கொண்ட அச்சங் காரணமாக இயற்கை யினிடத்து ஒரு மதிப்புத் தோன்றியிருக்கும். இதிலிருந்து நெடுங்காலங் கழித்து அச்சம் நீங்கியவனாய் இயற்கையில் ஈடுபடத் தொடங்கினான். இதுபற்றி அறிஞர் ‘முருகன் அல்லது அழகு என்ற நூலில் இதோ பேசுகிறார்:

. “மலையிடை வாழ்ந்த தமிழ் மக்கள் தங்கட்குக் கண்கூடாகக் காட்சியளித்த இயற்கையை அடிக்கடி கண்ணாற் கண்டு, உள்ளத்தால் முகந்து அதை - இடையறாது நினைந்து நினைந்து, அதன் கண் படிந்த வாழ்வு நடத்தினார்கள். அதன் பயனாக அவர்கள் இயற்கையினுள் பிரிவின்று விரவி நிற்கும் அழகையும், அழகின் மாறாத இளமையையும் இளமையிலுறும் அழியா மணத்தையும், இவையுடைய ஒன்று எல்லா வற்றையுங் கடந்து மாறுதலின்றி யொளிருந் தன்மை யையுள் கண்டார்கள். இவ்வழகு, இளமை, மணம்,

‘முருகன் அல்லது அழகு, பக்கம் 30-32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/70&oldid=695590" இலிருந்து மீள்விக்கப்பட்டது