பக்கம்:திரு. வி. க.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 67

பொறிகள் வழி அழகு அனுபவம்

எந்தக் காலத்தில் இறைவனை அழகன் என்றும், இளையோன் என்றும், இயற்கையின் வாயிலாகவும் அவன் இலங்குகிறான் என்றும், இத்தமிழர்கள் கண்டார்களோ, அன்றே பொறிபுலன்களின் பயனையும் பெற்றுவிட்டார்கள் என்று கூறலாம். இப்பரந்த உலகையும் இயற்கையையும் நோக்கி அதன் மனத்தை மோகந்து அதனைத் தொட்டு இன்புற்று வாழப் பழகிக் கொண்டனர் நம் முன்னோர். அவர்கள் போற்றும் இயற்கை கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அனுபவிக்கக்கூடிய ஒன்று என்ற முடிவிற்கு வந்த பின்னர், பொறிபுலன்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கொள்கை அர்த்தமற்ற கொள்கையாகி விட்டது. வாழ்வு முழுத்தன்மை பெறவேண்டுமாயின் பொறிபுலன் களின் உதவி இன்றியமையாதது. அவை இல்லாத வாழ்க்கை கல், மரம், செடி போன்ற வாழ்க்கையாகும்.

பொறிகள் தரப்பெற்ற காரணம்

மேலும் முற்றறிவினையுடையவனாகிய இறைவன் இந்தப் பரந்த் உலகையும் அதிலுள்ள இவ்வளவு அழகிய பொருள்களையும் படைத்துவிட்டு, அவற்றை அனுபவிக்கக் கூடிய பொறிபுலன்களையும் நம்மிடம் தந்துள்ளான். ஆனால், சிற்றறிவுடைய மனிதர் சிலர் இறைவனுடைய கருத்துண ராமல் அவனால் படைக்கப்பெற்ற பொறிபுலன்கள் மூலம் அனுபவிக்கக் கூடாது எனத் தடை செய்தனர். இறைவனின் கருத்து இதுவாயிருந்திருப்பின் மக்கள் குலத்திற்குப் பொறி புலன்களைப் படைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஒருவேளை அவை தரப்பெற்றிருப்பினும் அவற்றால் அனுப விக்கப் பெறும் இயற்கையை இத்துணை அழகுறப் படைத் திருக்க வேண்டுவதில்லை. எப்பொழுது இவை இரண்டும் இம்முறையில் அமைந்தனவோ இவற்றை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதே இறைவன் கருத்தாதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/77&oldid=695597" இலிருந்து மீள்விக்கப்பட்டது