பக்கம்:திரு. வி. க.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 69

துறந்து விட்டு எங்கோ சென்று தவஞ் செய்து வீடுபேற்றை அடைய முற்படுவது எத்துணை அறியாமையுடையது? வோர்ட்ஸ் வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞர் இயற்கை வழிபாட்டைப் பற்றிக் கூறுவதற்குப் பல்லாயிரம் ஆண்டு களின் முன்னரே இத்தமிழர் இயற்கை வழிபாட்டின் சிறப்பினை அறிந்து போற்றியுள்ளனர்.

இந்தக் கருத்தைத் திரு.வி.க. மிக அழகாக ‘முருகன் அல்லது அழகு என்ற நூலில் கீழ்வருமாறு குறிக்கின்றார்:

“இயற்கை அழகை உணரும் பேறு பெறுதல் எளிதன்று. அரிதில் முயன்று அப்பேறு பெற்ற ஒருவன் எக்காரணம் பற்றியும் அதை இழத்தலாகாது, அப்பேற்றிற்கு இடர் விளைவிக்கப் பலதிறப் பேய் களிருக்கின்றன. அப்பேய்களின் சூழ்ச்சிக்கு எளிமை யாய் இரையாகாதவாறு மகன் தன்னைக் காத்துக் கொள்வதே அறிவுடைமை. இதற்கென்ன செய்வது?

- இயற்கையை இடையறாது மகன் நினைந்த வண்ணமிருத்தல் வேண்டும். ஒன்றை இடையீடின்றி நினைந்துகொண்டிருக்கும் இயல்பு மிகச் சிலர்க்கே அமைவதுண்டு. மற்றப் பெரும்பான்மையோர்க்கு அவ்வியல்பு எளிதில் அமைவதில்லை. ஆதலால், இயற்கை நினைவினின்றும் பிரியாதவாறு தம்மைக் காக்கவல்ல முயற்சிகளில் இவர் தலைப்படுதல் சிறப்பு. இம்முயற்சியை வழிபாடு என்றுங் கூறலாம். வழிபாடுகள் பல திறத்தன. அவரவர் தத்தம் ஆற்றலுக் கியன்றதும், இயல்பிற்குப் பொருந்தியதுமாக உள்ள ஒவ்வொரு வித வழிபாட்டைக் கொள்வாராக.

ஈண்டுச் சிறப்பாக முத்திற வழிபாடுகளைக்

குறிக்கிறேன். ஒன்று பாட்டு; மற்றொன்று ஓவியம்; இன்னொன்று இசை, இவை மக்கள் உணர்வையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/79&oldid=695599" இலிருந்து மீள்விக்கப்பட்டது