பக்கம்:திரு. வி. க.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

பணியையும் செய்யுமாறு செய்த பெருமை தமிழ் முனிவர் திரு. வி.க. அவர்களையே சாரும்.

சமயப் பேரவைகள் மிகவும் நிறைந்திருந்த காலம் ஆதலினாலும், இலக்கியச் சொற் பொழிவுகளுக்கே அதிகச் செல்வாக்கு இருந்த காலமாதலாலும், அந்நாளில், ஒரு சமயத்தைச் சேர்ந்தோர் தம் சமயத்தின் சிறப்பை எடுத்துக் கூறுவதைக் காட்டிலும் பிற சமயங்களைப் பற்றித் துற்றுவதையே முன்னணி வேலையாகக் கொண்டிருந்தனர். ஒப்புநோக்கக் கூடப் பிற சமயங்களைப்பற்றிப் பேசுவது தவறு என்று கருதிய அக் காலத்தில் சைவ சபை, வைணவ சபை, கிறித்துவர் விழா, நபிகள் விழா ஆகிய அனைத்திலும் பங்குகொண்டு, இவற்றில் கார்ல் மார்க்ஸின் சமதர்மக் கொள்கையையும் கேட்பவர் விரும்பிக் கேட்கின்ற முறையில் பேசிய ஒரு பெரியார் உண்டென்றால், அவர்தாம் திரு. வி.க. இச் சபைகள் அனைத்திலும் சமரச சன்மார்க்கத்தைப் போதித்தார் அப் பெரியார்.

வடமொழி கலந்த தமிழ் பாதியும், ஆங்கிலம் பாதியுமாகத் தமிழ் என்ற பெயருடன் செய்தித்தாள்கள் வெளிவந்த அந்த நாளில் அரசியலைப்பற்றி எழுதவோ பேசவோ வேண்டுமாயின் ஆங்கிலத்தில்தான் முடியும் என்று கருதிய அந்த நாளில்-தமிழில், தம் தூய இனிய தனித் தமிழில், எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினையையும் ஆய முடியும் என்ற பேருண்மையை நிலைநாட்டியவர் திரு. வி.க. முன்னைப் பழம் பொருட்கட்கு முன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/8&oldid=695600" இலிருந்து மீள்விக்கப்பட்டது