பக்கம்:திரு. வி. க.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இ. அ.ச. ஞானசம்பந்தன்

இயற்கையையும் தொடர்புபடுத்தத்தக்க பாலங்கள் போன்றன.

முதலாவது பாட்டை எடுத்துக் கொள்வோம். பாட்டாவதென்னை? இயற்கையே பாட்டு. இயற்கை பாட்டெனில் அதன் உள்ளுறையாக உள்ள முருகு அல்லது அழகும் பாட்டாகும். இயற்கையை உள்ள வாறு எழுத்தால் அணிபெற வரைவதும் பாட்டே. இப்பாட்டை இயற்கையின் படம் என்று சொல்லலாம்.

இயற்கை எப்பொருளை உளத்தில் பதிக்கிறதோ, அப்பொருளையே அதன் படமாக உள்ள பாட்டும் பதித்தல் வேண்டும்; அங்ஙனம் பதிவியாதது பாட்டன்று. •

குருமணி உறைந்து உருண்டு திரண்டாலென இருள் சூழ்ந்த கொண்டல் முடியும், செஞ்ஞாயிற்றின் எழு கதிருமிழும் இளவெயிலில் ஒன்றி அழகு காட்டும் பச்சைப் பசுங்காட்டுப் போர்வையும், மணிகொழித்து முழவார்த்துச் சங்கொலிக்கும் அருவி அணியும், வண்டு யாழ் முரலும், குயில் பாட்டும். மஞ்ஞை ஆட்டும் கொண்ட ஒரு மால்வரை நிற்கிறது. அவ்வரையை எழுத்தால் ஒவியமாக ஒரு புலவன் வரைந்த பாட்டு மற்றோரிடத்தில் பொலிகிறது.

அம்மலையைப் பாராது இப்பாட்டைக் கண்ணுற்ற வேறொரு புலவனும், இப்பாட்டைக் காணாது அம் மலையை நோக்கிய மற்றொரு புலவனும் ஒரு நிலையத்தில் சந்திக்கின்றன்ர். முன்னைய புலவன் பாட்டின் சிறப்பைக் கூறப் புகுந்தான். பாட்டுப் பொருளை அவன் விரித்துப் பகருங்கால், பொருள் இன்பத்தைச் செவிமடுத்த மற்றொருவன், இஃதென்ன பாட்டா? மலையா? வழியிடை யான் கண்ட ஒரு மலையைப் பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/80&oldid=695601" இலிருந்து மீள்விக்கப்பட்டது