பக்கம்:திரு. வி. க.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 71

பேசுகிறீரே! அம் மலையின் படமோ இப்பாட்டு? அம் மலை, புறத்தே வழங்கிய காட்சியையும் இன்பத்தையும், இப் பாட்டு அகத்தே வழங்குகிறது என்று மகிழ் வெய்தினான். பின்னை அவ்விரு புலவருங் குறித்த மலை போந்து, அம் மலை பாட்டாகப் பாடியுள்ள அழகையுணர்ந்து இன்புற்றனர். இன்பத்தில் இருவரும் ஒருவராயினர்.

புறத்தே இயற்கையைக் காண்போன் எத்தகைய இன்பத்தை நுகர்கிறானோ, அத்தகைய இன்பத்தை அவ்வியற்கைப் பாட்டை ஓரிடத்திலிருந்து படிப் போனும் நுகர்தல் வேண்டும். இத்தன்மை வாய்ந்த ஒன்றே பாட்டாகும்.

பாட்டுக்குரிய பொருட் காட்சியையாதல், அதற்குரிய இன்பத்தையாதல் வழங்காதது பாட்டா காது. அது வெறுஞ் சொற்கட்டேயாகும். அது விரைவில் உளுத்துப் போகும்.

இயற்கையை உள்ளவாறு குறிக்கும் பாட்டை அணிபெற யாக்க வல்லான் எவன்? புலன்களை இயற்கை வழிப்படுத்தித் துய்மை செய்து, இயற்கை அழகை உளத்தால் முகந்து, உணர்விற்கு இன்ப விருந் துாட்டும் ஒருவனே இயற்கையைப் பாட்டில் வடிக்க வல்லான். அப்புலவன் இயற்கையைப் பாட்டோவிய மாக வரையும்போது, அவன் புலன்களிலும், உளத்திலும், உணர்விலும் இயற்கையும், இயற்கைப் பொருஸ்ரீப்புகளும், கூறுபாடுகளும், இயல்புகளும், பிறவும் எவ்வாறு படிகின்றன என்று சொல்லலும் வேண்டுமோ? அவன் இயற்கை வண்ணமாகிறான்.

இயற்கை படியும் இடந்தொறும் அழகெனும் முருகன் எழுந்தருள்வன். ஆகவே, இயற்கையைப் பாடப் புகுவதும் முருகன் வழிபாடாதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/81&oldid=695602" இலிருந்து மீள்விக்கப்பட்டது