பக்கம்:திரு. வி. க.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அ.ச. ஞானசம்பந்தன்

தொடர்புடைய வழிபாடுபற்றிப் பேசுகிறார். வழிபாடு என்பதற்கு இறைவனிடம் உள்ளத்தை வழிப்படுத்துதல் என்று பொருள் கூறினால் தவறில்லை. அவ்வாறானால், இயற்கையே இறைவன் வடிவம் என்று கூறிவிட்ட பிறகு உருவ வழிபாட்டிற்கு இடமேது என்ற ஐயம் சிலர் மனத்தி லாவது எழலாம். இந்நாட்டில் தோன்றி வளர்ந்த சைவம், வைணவம் இரண்டுமே மும்மூர்த்திகள் என்று பேசுவதை அறிவோம். மும்மூர்த்திகளும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்வதாகக் கூறுகிறோம். உலகிடைத் தோன்றிய பழமையான சமயங்கள் பலவும் மும்மூர்த்தி வழக்கைப் பின்பற்றியுள்ளன. என்றாலும், முழுமுதற் பொருள் இம்மூவருக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்பதைச் சாற்றியுள்ளன. மூவரும் அறிகிலர் என அப்பர் பெருமானும், மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கு முதல்வன் தன்னை எனவும் ‘மூவர் முதல்வன் மூவுலகாளி’ எனவும் நம்மாழ்வாரும் பாடுவது இக்கருத்தை வலியுறுத்தும். அவ்வாறாயின், இந்நாட்டவர் முழுமுதற் பொருளை உருவமாகக் கண்டு நினைந்துதான் வழிபட்டனரா? முழுமுதற் பொருளுக்கு ஊர், பெயர், வடிவு ஒன்றுமில்லை. ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்று மணிவாசகரும் வேறாய் உடன் ஆளான் இடம் விழிம் மிழலையே’ என ஞானசம்பந்தரும் பாடியிருக்கையில், கடவுளுக்கு வடிவு கற்பித்தது ஒரு பயன் கருதித்தான் என்பதை அறிதல் வேண்டும்.

மனம் பற்ற முடியாமை

அறிவு, உணர்வு என்ற இரண்டின் துணைகொண்டு கடவுட் பொருளை ஆய்ந்த தமிழின் கடவுள்’ என்று முழு முதற் பொருளுக்குப் பெயரிட்டதே அவனுடைய திறத்தை அறிவிக்கும். கற்பனை கடந்த சோதி என்று பாடும் இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/84&oldid=695605" இலிருந்து மீள்விக்கப்பட்டது