பக்கம்:திரு. வி. க.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 75

மனம், வாக்கு ஆகிய அனைத்தையும் கடந்து நிற்பது என்ற பொருளில்தானே கடவுள் எனப் பெயரிட்டனர். அவ்வாறா யின், உருவ வழிபாட்டிற்கு இந்நாட்டில் இடம் ஏது என்று கருதலாம். கடவுளின் கற்பனைக்கெட்டா நிலையை அறிய முயன்ற மனிதன் தன்னுடைய குறைபாட்டையும் நன்கு அறிந்து கொண்டான். எல்லையற்றதாய், எங்கும் நிறைந்த தாய், என்றும் உள்ளதாய் உள்ள பரம்பொருளை எல்லை உடையதாய், ஓரிடத்தே மட்டும் உள்ளதாய், அழிதன் மாலையதாய் உள்ள மனம் சென்று பற்றிச் சிந்தித்தல் இயலாத காரியம். எனவே, எல்லையுடைய இம்மனித மனம் பற்றக்கூடிய நிலையில் பரம்பொருளுக்கு வடிவு சமைத்தான் மனிதன். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் இவன் சமைத்த வடிவில் மட்டும் தோன்றிய மக்கள் அவரவர்கள் சூழ்நிலை, பழக்கவழக்கம் என்பவற்றிற்கேற்ப இறைவனுக்கு வடிவு சமைத்தனர். அதிலும் இந்நாட்டவர்கள் தம் கூர்த்த மதியின் உதவி கொண்டு நாத தத்துவம், விந்து தத்துவம் ஆகிய இரண்டையும் கடவுளுக்குரிய இன்றியமையா உறுப்பு களாகச் செய்தனர். முருகன் மயில்மேலமர்ந்து கோழிக் கொடி பிடித்துள்ளான் என்றே கதை எழுதினர். இவற்றுள் மயில் விந்து தத்துவத்தையும் கோழி, நாத தத்துவத்தையும் குறிப்பிடல் காண்க. அந்தக் கோழியும் மயிலும் சூரபன்மன் இரண்டாகப் பிளக்கப் பெற்றபொழுது உண்டாயினவாம். அகங்கார வடிவாக இருக்கின்ற வரையில் ஒன்றும் புலப் படாமல் அஞ்ஞான இருளில் மூடப் பெற்றிருந்த ஒன்று அஞ்ஞானம் அகற்றப்பெற்ற பின் நாதமாய், விந்துவாய் விரிந்தமை அறியப்படல் வேண்டும்.

நாத தததுவம

உலகின் தோற்றமே நாதத்திலிருந்துதானே ஏற்படுகிறது. எனவே, திருமாலுக்கு ஒரு சங்கையும் இறைவனுக்கு ஓர் உடுக்கையையும் தந்தனர். இவ்வுலகமும்-ஏன்?-அண்ட முழுதுமே அவனுடைய வடிவமென்று சங்ககாலத்தின் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/85&oldid=695606" இலிருந்து மீள்விக்கப்பட்டது