பக்கம்:திரு. வி. க.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 77

|

அல்லது அடையாளத்துள் அடைக்கும் பிழையைச் செய்தவர்களாவோம். எனவே, பெரியோர்கள் அப் பிழையும் நேராமல் இருத்தற்கு எதிர் மறை முகத்தான் இறைவனைக் குறித்தும் சென்றனர். வேறாய் உடன் ஆனான்’ என்று ஆளுடைய பிள்ளையாரும் மூவுலகங்களுமாய் அல்லனாய்’ என்றும்,

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலும் ஆகான் உளன் அல்லன் இலன்அல்லன் பேணுங்கால் பேணும் உருவாகும்; அல்லனுமாம்: கோணை பெரிதுடைத்து எம்மானைக் கூறுதலே’

என்றும் நம்மாழ்வாரும் கூறிப் போயினர். மாறும் உலகம்

வேற்றுமையில் ஒற்றுமை காண முற்பட்ட நம் பெரியோர்கள் அனைத்தும் அவனே என்ற முடிவிற்கு மிக முற்காலத்திலேயே வந்துவிட்டனர். உலகம் முழுவதையும் ஆய்ந்தாலும் அவன், அவள், அது என்ற முறையில் சுட்டி உரைக்கத்தக்கதாய் இவ்வுலகு அடங்கிவிடுகிறது. சுட்டப் படும் பொருள் எதுவாகத இருப்பினும் அது மாறுதலடையும் இயல்புடையவை என்றால், அம்மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில் வழி எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கவும் மாறுதலடையவும் இயலாது. மாறா நிலைக்களன்

மாறுதலடையும் உலகின் நிலைக்களனாய் அமைகின்ற பொருள், தோற்றம் ஒடுக்கம் முதலியன அற்றதாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய்நிலைக்களனாய் இருத்தல் வேண்டும். தோற்றம் ஒடுக்கம் உடையதைச் சடம் அல்லது அசித்து’ என்றும் இவை இரண்டும் அற்றதைச் சித்து அல்லது அறிவு என்றும் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/87&oldid=695608" இலிருந்து மீள்விக்கப்பட்டது