பக்கம்:திரு. வி. க.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அச. ஞானசம்பந்தன்

முன்னோர் கூறினர். மாறுதலுடைய அசித்துக்கு மாறுதல் அற்ற சித்து, வித்தாய் இருத்தல் இயல்பு. சடமாகிய உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்கு வித்தாயிருப்பது சித்தாகிய கடவுள் என்பது இந்த நாட்டாருடைய கொள்கை இதனையடுத்து சத், சித்து, ஆனந்தம் என்ற மூன்றையும் கண்ட அறிஞர்கள் இவற்றுள் ஒரு தொடர்பைக் கண்டனர். சத் என்பது சத்தியம்; சித் என்பது அறிவு; ஆனந்தம் என்பது உண்மை. இவை ஒன்று உள்ள இடத்தில் ஏனைய இரண்டும் இருந்தே தீரும். இவற்றின் தன்மையை நன்கு அறிந்த பெரியோர்கள் சத்’ என்பதை ஆணாகவும், சித் என்பதைப் பெண்ணாகவும், ஆனந்தம்’ என்பதைக் குழந்தையாகவும் உருவகித்தனர்.

இந்த முறையில் பொதுவாகச் சமயத்தைப் பற்றிக் கூறிய திரு.வி.க. அவர்கள், சைவராகப் பிறந்த காரணத் தாலோ, அன்றி வேறு எக்காரணத்தாலோ சைவ சமயம் பற்றி ஆழ்ந்து சென்று ஆராய்ந்துள்ளார். வேதாந்த சிம்மம் என்று போற்றப்பட்ட விவேகானந்த அடிகளுங்கூடச் சைவ சித்தாந்த உண்மைகளை ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை யவர்கள் மூலம் அறிந்து வியப்பெய்தினார் என்று கூறுகின் றார்கள். எனவே, சைவ சித்தாந்தம் போன்ற பரந்த ஒரு சமயக் கொள்கையைக் காண்டல் அரிது.

‘சைவத்தின் சமரசம் என்ற நூலில் பெரியார் கீழ் வருமாறு பேசுகிறார்:


yjal சித்தாந்தம் முப்பொருளுண்மை கூறினாலும் பொருளொன்றே என்னுங் கொள்கை யையும் வேறு வேறு என்னும் கொள்கையையும் தன்னகத்தே தாங்கி நிற்றலால், எக் கொள்கை யினரிடத்தும் அது மாறுபட்டு நிற்பதில்லை. கடவுள் உலகுயிரோடு நீக்கம் அறக் கலந்து நிற்றலானும் கடவுளுக்கு வேறாகப் பிரிந்து உலகும் உயிரும் நிற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/88&oldid=695609" இலிருந்து மீள்விக்கப்பட்டது