பக்கம்:திரு. வி. க.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 79

லின்மையானும் கலப்பால் ஒற்றுமையும் பொருட்டன் மையால் வேற்றுமையுஞ் சைவ சித்தாந்தம் தெரிவிக் கிறது. பொருளொன்றே என்று கூறுவோரை நோக்கி, ஆம் கலப்பால் ஒன்றே என்றும் பொருள் வேறு வேறு என்போரை நோக்கி, ஆம் பொருட்டன் மையால் வேறு வேறு என்று இருவரையும் தன்னுடன் சேர்த்துப் பிணக்கொழிக்கும் பெருந்தகைமை வாய்ந்தது சைவ சித்தாந்தம். கலப்பால் ஒற்றுமையும், பொருட்டன்மையால் வேற்றுமையுமுடைய ஒரு நிலையையே சைவ சித்தாந்தம் அத்துவிதம் என்று சொல்கிறது.

‘உலகெலா மாகி வேறாய் உடனுமாய்’

என்று மெய்கண்ட சாத்திரம் முழங்குகிறது.

அத்துவிதமென்னும் சொல்லிலுள்ள அகரத் துக்கு மெய்கண்டார் அண்மைப் பொருள் கொண்டார். எண்ணுப் பெயர்முன் வரும் அகரம் அண்மைப் பொருள் குறிக்கு மென்பது அவர் கருத்து. ஒன்றென்பதற்கு ஏகமென்னுஞ் சொல்லிருப்ப, இரண்டைக் குறித்தற்குத் துவிதமென்னுஞ் சொல்லிருப்ப, வேதாந்தம் இரண்டையும் விடுத்து, அத்துவிதமென்று அறைவதன் நோக்கமென்னை? ஒன்று இரண்டு என்று சொல்ல முடியாத நிலையை அத்வைதம் என்று வேதாந்தம் அருளியிருக்கிறது. நமது சைவ சிந்தாந்தத் தவப்பொருளாம் மெய்கண்டார் இவ்வுண்மையைக் கண்டமையான்,

‘பொய்கண்டார் காணாப்புனிதமெனும் அத்துவித மெய்கண்டநாதன் அருள் மேவுநாள் எந்நாளோ

என்று தாயுமானரும் அவரைப் போற்றலானார். ஆகவே, சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/89&oldid=695610" இலிருந்து மீள்விக்கப்பட்டது