பக்கம்:திரு. வி. க.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இ. அ.ச. ஞானசம்பந்தன்

கூடாமல் செய்யும் சிலபல குற்றங்கள் பற்றி அவருடைய கருத்தை அறிதல் வேண்டும்.

மிகப் பழமையானது என்ற காரணத்தால் ஒன்றை மதித்துப் போற்றவேண்டும் என்ற கொள்கைக்குப் பகைவ ராவார் திரு.வி.க. சாதிப்பேய் மிக நீண்ட காலமாக இந்நாட்டில் வேரூன்றி இருந்துவருகிறது. தம்மால் பெரிதும் போற்றப்பட்ட மகாத்மா காந்தியிடம்கூட இக்குறையைக் காண்கிறார் திரு.வி.க. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

“காந்தியடிகள் கூறும் வருணாச்சிரமத்தைக் கூர்ந்து உன்னுதல் வேண்டும். அவரது வருணாச் சிரமத்தை வைதிகரும் கொள்வதில்லை; சீர்திருத்தக் காரரும் ஏற்பதில்லை. அடிகள் வருணாச்சிரமம் பிறப்பு வழி இயங்கல் வேண்டும் என்கிறார். அவர், உழவோன் மகன் உழவுத் தொழில் செய்தல் வேண்டு மென்றும், வாணிபன் மைந்தன் வாணிபத் தொழில் புரிதல் வேண்டுமென்றும், இவ்வாறு பிறப்பை யொட்டியே. மற்றத் தொழில் முறைகளும் நடை பெறுதல் வேண்டுமென்றுங் கூறுகிறார்; இத்தொழின் முறை வேற்றுமைகொண்டு பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் கூடாதென்றுஞ் சொல்கிறார். வருணாச் சிரமத்தைப்பற்றிப் பேசவோ எழுதவோ நேரும் போதெல்லாம், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் அறியாமை என்பதை அடிகள் வலியுறுத்தியே வருகிறார். உண்ணல், தின்னல், மறையோதல், திருக் கோயில் பூசை முதலியன பிறப்புவழி நிகழ்தல் வேண்டு மென்று அடிகள் அறைவதில்லை. பிறப்புவழித் தொழின் முறைகள் நடைபெற்றுவரின், உலகில் போராட்டம் அருகி அமைதி பெருகுமென்பது அடிகளின் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/94&oldid=695616" இலிருந்து மீள்விக்கப்பட்டது