பக்கம்:திரு. வி. க.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 85

வருணாச்சிரமத்தைப் பற்றி அடிகள் வெளியிட் டுள்ள கருத்துக்களில் பல பொன்னேபோல் போற்றற் குரியன. ஆனால், ஒன்றுமட்டும் எனது சிற்றறிவிற்கு விளங்கவில்லை. அஃதென்னை? அது பிறப்புவழி வருணாச்சிரமம் இயங்கவேண்டுமென்பது. அது குறித்துப் பன்னெடு நாள் யான் உன்னியது உண்டு.

பிறப்பையொட்டித் தொழின்முறைகளைக் கட்டுப்படுத்தல் இயற்கை நோக்கைச் சிறைப்படுத்து வதாகும். அவரவர் இயல்புக்கேற்ற தொழில்களை அவரவர்கள் ஏற்றுச் செய்யலாம். அவரவர் இயல்பு வழித் தொழில்களை ஏற்றுச் செய்வதே இயற்கை முறை. பிறப்பு வழித் தொழில்கள் நடைபெறல் வேண்டுமென்று கட்டுப்படுத்துவது இயற்கையை ஒறுப்பதாக முடியும். விளக்கம் எனது தலைமையுரை களைக் கொண்ட தமிழ்த் தென்றல் என்னும் நூலிற் காண்க. ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என வரும் திருவள்ளுவர் மொழியே இயற்கை நோக்குக்கு அரண் செய்வதாகும். இதுவே சிறியேன் உட்கிடக் கையும்.”*

அன்றைய நிலை

சாதிப் பித்தை அறவே வெறுத்து ஒறுக்கும் இவ்வறிஞர் சரித்திரத்தை மாற்றிக் கூற விரும்பவில்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்திலும் சாதாரண மக்களைப் பொறுத்த மட்டில் இப் பேய் தலைவிரித்தாடியதை அறிஞர் குறிக்கிறார். ஆனால், இவற்றைக் கடந்து நின்ற பெரியார்கள் மட்டுமே பெரியார்களாகக் கருதப்பெற்றனர். என்ற உண்மையையும்

• மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பக்கம் 121-123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/95&oldid=695617" இலிருந்து மீள்விக்கப்பட்டது