பக்கம்:திரு. வி. க.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அ.ச. ஞானசம்பந்தன்

எடுத்துக் கூறுகிறார். நாயன்மார் திறம் என்ற நூலில் பின் வருமாறு கூறுதல் அறிதற்குரியது:

‘அறுபத்து மூவருள் வேதியளிருந்தனர்; வேளாள ரிருந்தனர்; சாலியர் இருந்தனர்; சான்றார் இருந்தனர்; பஞ்சமர் இருந்தனர்; பரதவர் இருந்தனர்; வண்ணார் இருந்தனர்; வேடர் இருந்தனர்; வேறு பல சாதியாரு மிருந்தனர். இப் பெரியவர்கள் தாங்கள் பிறந்த சாதியில் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டு, தாங்கள் செய்த சேவையில் ஒருவரோடொருவர் மலைந்து பூசல் விளைத்தார்களோ? எல்லோரும் ஆன்மநேய ஒருமைப் பாட்டில் கட்டுப்பட்டுக் கிடந்தனர். அவர்தம் வழிவழி வந்த தமிழ் மக்கள் இப்பொழுது சாதிப் பகைமையில் தலைசிறந்து விளங்குகிறார்கள். என்னே காலம்! என்னே கொடுமை!!

சாதியால் தீட்டு உண்டு என்னுங் கருத்துக் கொண்டிருந்த நமிநந்தியடிகளுக்குக் கடவுள், எல்லா மனிதருஞ் சிவகணங்களே என்ற உண்மையை அறிவுறுத்தியதையும், அந்தணச் செல்வராகிய திருநீல நக்கர், தம்மில்லம் போந்த திருநீலகண்ட யாழ்ப் பாணர்க்குத் தம் வீட்டின் நடுவண், வேதிகையின் பாங்கர், இடந் தந்து உபசரித்ததையும், வேறு பல நாயன்மார் சாதி பேதங் கருதாது, எல்லாரிடத்துஞ் சமரச உணர்வு கொண்டு, அன்னமிட்டு வழிபட்ட வரலாற்றையும் பெரிய புராணத்திற் பரக்கக் காண்க.

நாயன்மார் காலத்தில் சாதிபேதம் இருக்க வில்லை என்று சொல்லுதல் முடியாது. அவர்கள் காலத்தில் சாதி பேதம் இருந்தது. ஆனால், சாதிபேதம் பாராட்டப்படவில்லை. சாதி பேதங் கூடாது என்று உபதேசிக்கும் தற்கால நாகரிக தேவதை தாண்டவம் புரியும் இந்த வேளையில், சாதி நிந்தை, சாதி பகைமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/96&oldid=695618" இலிருந்து மீள்விக்கப்பட்டது