பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மு. பரமசிவம் &

ஆஹா, சோழ சைன்னியத்தைச் சேர்ந்தவர் களில் ஒருவர்கூடத் திரும்பிப் போகவில்லை. ஒருவர்கூட எதிரியிடம் சரணாகதி அடைய வில்லை என்று சொன்னதும் அந்த மகாவீரரின் முகத்தில் என்ன கவர்ச்சி! என்ன மலர்ச்சி! அவ்வளவுதான்! அவருடைய மாசற்ற வீரம் என் மனத்தைக் கவர்ந்துவிட்டது.

'உன் மனதில் ஏதாவது குறை யிருந்தால் சொல்லு பூர்த்தியாகாத மனோரதம் ஏதாவது இருந்தால் தெரிவி. அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்றேன்.

ஆம் ஸ்வாமி... என் மனதில் ஒரு குறை இருக்கிறது. சோழ நாடு தன் புராதனப் பெருமையை இழந்து இப்படிப் பராதீன மடைந்திருக்கிறதே என்பதுதான் அந்தக் குறை. என்னுடைய காலத்தில் அது சுதந்திர மடையாவிட்டாலும் என் மகனுடைய காலத்தி லாவது அது சுதந்திரமடைய வேண்டும் என்பதுதான் அந்த மனோரதம்...

அதற்கு விக்கிரமன் வீர மகனாய் வளர வேண்டும். சோழ நாட்டு மேன்மையே அவன் வாழ்க்கையில் லட்சியமாயிருக்க வேண்டும். உயிர் பெரிதல்ல. சுகம் பெரிதல்ல. மானமும், வீரமுமே பெரியவை என்று அவனுக்குப் போதிக்க வேண்டும். இந்த வரந்தான் நான் தங்களிடம் கேட்கிறேன் தருவீர்களா?

என்றார்.