பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 99

“தருகிறேன் பார்த்திபா தருகிறேன்... உன்னுடைய மனோரதத்தை அவசியம் நிறைவேற்றுகிறேன்; நான் உயிரோடிருந்தால் என்றேன். அவருடைய உயிர் பிரிந்தது. என்னுடைய உள்ளம் இப்போது உங்களைத் தேடி வந்திருக்கிறது. என்னை நம்பி உன் விக்கிரமனை நீ என்னிடம் ஒப்படைப்பாயா? அரு: தங்கள் சித்தம் என் பாக்கியம். எனக்கு வேண்டியதெல்லாம் என் மகன் வீரமகனாக வளரவேண்டும் என்பதே.

சிவ: மிக்க சந்தோஷம். வா விக்கிரமா. (சிவனடியார் செல்ல விக்கிரமனும், அருள்மொழியும் அவரைத் தொடர்கிறார்கள்.)

மாரப்ப பூபதி விக்கிரமனைச் சிறை பிடித்தா லொழிய சோழ சிம்மாசனம் தனக்குக் கிடைக்கா தென்று நினைத்துச் சூழ்ச்சி செய்கிறான். அவன் பேச்சை நம்பி சிராப்பள்ளி மலையிலே புலிக் கொடியைப் பறக்க விட விக்கிரமன் கிளம்புகிறான். சிவனடியார் யாவரையும் சந்தித்து விவரமறிந்து கிளம்பி எங்கோ செல்கிறார். விக்கிரமன் எதிர்பார்த்தபடி தோல்வியுற்றுக் கைதாகிறான்.

இதற்கிடையே நரசிம்ம வர்மரைச் செண்பகத் தீவின் மந்திரி சித்தார்த்தர் சந்திக்கிறார். அரசரில்லாத அந்தச் சோழ பூமிக்கு ஒரு அரசனைத் தேர்ந் தெடுத் தனுப்புவதாகக் கூறுகிறார் நரசிம்மவர்மர். ஆனால் தன் மகள் குந்தவி, விக்கிரமனை விரும்புவதையும் அவர் அறியாமல் போகவில்லை! ஆகவே விக்கிரமனை நாடு கடத்த உத்தரவிடுகிறார். சிவனடியார்தான்