பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 107

யெடுத்துச் சென்றார். புலிகேசியை வதைத் தார். சிவகாமியின் சபதத்தின்படி வாதாபியை அக்கினி பகவானுக்கு இரையாக்கி விட்டு 'இப்போதாவது உன் உள்ளம் குளிர்ந்ததா? என்று வெறுப்புடன் கேட்டார். அன்று தோன்றிய அந்த வெறுப்பை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விதி தாலாட்டி வளர்த்தது. அதன் பயனாக ஒன்று பட்ட இதயங்கள் இரண்டும் பிளவுபட்டன. சிவகாமி, தன் காதலைத் துறந்துவிட்டாள்; கலையையும் தெய்வார்ப்பணமாக்கிவிட்டாள். (என்று கூறி முடிக்கிறார்) இதுதான் பேதை சிவகாமியின் கதை. இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதீர்கள். தயவு செய்து கேட்காதீர்கள்.

முகத்தைத் திருப்பிக் கொண்டு விம்முகிறான்.

அதற்காக அழவேண்டியவன் மாமல்லரல்லவா?

தாங்கள் ஏன் அழவேண்டும்? பழகிய தோஷந்தான். படுத்துக் கொள்ளும்.

(எழுந்து செல்லுகிறார்.)

மகாராணி எங்கே?

விக்கிரமன் குதிரையில் செல்லும்போது காட்டாறு குறுக்கிடுகிறது. துணிந்து அவன் இறங்கி விடுகிறான். ஆனால் குதிரை சமாளிக்க முடியாமல் அவனைத் தள்ளிவிட்டுப் போய்விடுகிறது. அவன் தடுமாறும்போது, தற்செயலாக அங்கே வந்த