பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மு. பரமசிவம் *

பொன்னன் நீரில் பாய்ந்து காப்பாற்றி மகேந்திர மண்டபத்துக்குத் தூக்கிச் சென்று மூர்ச்சை தெளிவிக்கிறான். பொன்: மகாராஜா. மகாராஜா. மகாராஜா...

மகாராஜா... விக்: பொன்னா... பொன்னா... நிஜமா... நீதானா?

இல்லை இதெல்லாம் கனவா? பொன். நானும் அதையேதான் கேக்குறேன் மகாராஜா,

நிஜமாக நீங்க தானா, இல்லே கனவா? விக்: நான்தான் பொன்னா... விக்ரமன் தான்.

மகாராணி எப்படி இருக்கிறார் பொன்னா? பொன். அதை ஏன் கேக்கறிங்க? விக்: ஏன்? என்ன நடந்தது? பொன்: தை அமாவாசை அன்னிக்குக் காவேரி

சங்கமத்திலே குளிக்கிறப்போ... விக்: என்ன பொன்னா... என்ன நடந்தது? பொன்: உங்க ஞாபகமாகவே இருந்த மகாராணி, 'இதோ வந்துவிட்டேன் விக்கிரமா. இதோ வந்துவிட்டேன்' என்று கத்திக்கிட்டே அலையோடு அலையாப் போயிட்டாங்க. விக்: ஆ. அப்புறம்?

பொன். நானும் பரஞ்சோதி அடிகளும் சங்கமத்திலே எறங்கி மகாராணியைத் தேடுதேடுன்னு தேடினோம். கெடைக்கலே, கடைசியிலே