பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 119

குந்:

போய்விடக்கூடாது. என்னையும் அழைத்துக் கொண்டு போகவேண்டும்.

இதைக் கேட்டதும் அளவற்ற வியப்புடன் குந்தவியின் கரத்தைப் பற்றித் தழதழத்த குரலில் பேசுகிறான். தேவி! என்ன சொன்னாய்? என் காதில் சரியாய் விழுந்ததா? மகா பல்லவ சக்கரவர்த்தியின் ஏக புதல்வியான நீ, இந்தத் தேசப் பிரஷ்டனுடன் கடல் கடந்து வருவாயா? உங்களுக்கேன் இவ்வளவு சந்தேகம்? பெண் குலத்தைப் பற்றியே நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்.

கையில் பெட்டியுடன் பொன்னன் வந்து அழைக்கிறான்.

பொன். மகாராஜா...

விக்:

பொன்னா.. இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். வேறு படகை தருவதாகச் சொல்லுகிறார்.

பொன்: எல்லாம் காதில் விழுந்தது மகாராஜா.

குந்:

இவ்வளவு தொல்லை யெல்லாம் என்னத்திற்கு?... தேவி சொல்வதை சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி...

என்ன சொன்னாய்? உங்கள் மகாராஜாவை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் நான்