பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மு. பரமசிவம் *

சிறு:

மகாஜனங்களே! உங்களைப் போலவே நானும் மடமையில் ஆழ்ந்திருந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் அன்பே உருவான சிவபெருமான் கையில் மண்டை ஒட்டுடன் காட்சி அளிப்பதும், கருணையே வடிவான பராசக்தி கழுத்தில் கபால மாலையுடன் காட்சியளிப்பதும், தத்வார்த்தம் கொண்டவை என்பதை அறியாமல் என் சொந்தப் பிள்ளையையே நான் கபாலிகர்களுக்குத் தத்தம் செய்தேன். அப்போது, சற்றுமுன் இங்கு கட்டுண்டு கிடந்த சிவனடியார்தான் என் கண்களைத் திறந்துவிட்டார்.

குரல்: எங்கே அந்தச் சிவனடியார்? யார் அந்தச்

சிறு:

சிவனடியார்?

அந்த மகா புருஷர் இந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். அவர் யார் என்பதை வெளியிட இன்று எனக்கு அதிகாரமில்லை. இன்னும் இரண்டு நாட்களில் உறையூரில் நடக்கப் போகும் வைபவத்துக்கு நீங்கள் வந்தால் அவர் யார் என்பதை அறியலாம். இப்போது பயத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாதகன் யார் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இருபது வருஷங்களுக்கு முன்னால் தமிழகத்தின் மேல் படையெடுத்த புலிகேசியின் சகோதரன் இவன். இவனுடைய சகோதரனைப் பழிவாங்குவதற்காக நானும் நரசிம்ம வர்மரும் தொடுத்த வாதாபிப் போரில் ஒரு கையை இழந்து சரணாகதி என்று