பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぐ ரையுலகில் விந்தன் 127

ша: த

பைர:

LOITT:

என்காலில் விழுந்தவன் இவன்! புலிகேசியை விடக் கொடியவனான இவனுடைய பெயர் கபால பைரவன் அல்ல. நீலகேசி!

நீலகேசி! நீலகேசி!

சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்துக்கு விரோதமாக உங்களையெல்லாம் தூண்டிவிட இவன் செய்த சதியே இந்த ரணபத்ரகாளி கோயில்.

என்ன மோசம் என்ன வஞ்சகம்!

இல்லையென்றால் காளி பக்தனான இவன் ஆயிரக்கணக்கான கத்திகளையும் கட்டாரிகளையும் கொல்லிமலையின் உச்சியிலுள்ள குகைகளில் ஒளித்து வைப்பானேன்? சிவனடியாரின் அன்புக்கும் அனுதாபத்துக்கும் பாத்திரமான பார்த்திப மகாராஜாவின் பத்தினி அருள்மொழி தேவியைச் சிறைப்படுத்தி வைப்பானேன்?

பொய்... எல்லாம் பொய்... இதற்கெல்லாம் சாட்சி எங்கே?

இதோ நான் இருக்கிறேன் சாட்சி. இவன் மகா ராஜாதி ராஜா நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்தான். அந்தச் சதியில் என்னையும் சேரும்படிச் சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு தேசப் பிரஷ்டனான விக்கிரமனையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளப் பார்த்தான்.