பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவையும் நாவலைப் பல எழுத்தாளர்கள் படித்துப் பாராட்டியுள்ளனர். குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

1936இல் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்திய தமிழரசு' அச்சகத்தில் அச்சுக்கோக்கும் தொழிலாளி யாகச் சேர்ந்தார் விந்தன். அப் பத்திரிகையின் ஆஸ்தான கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அக்காலத்தில் 'தமிழரசு' இதழில் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் புகழ் பெற்ற கவிதையை முதன்முதலில் அச்சுக்கோத்தவர் பிற்காலத்தில் எழுத்தாளராக, கவிஞராகப் புகழ்பெற்ற விந்தன் அவர்களே!

1954இல் 'மனிதன் என்னும் மாத ஏட்டை வெளி யிட்டார். புரட்சிகரமான அந்த ஏட்டை அனைவரும் படித்துப் பாராட்டினார்கள். அதிலும் அந்த ஏட்டில் வெளிவந்த தெருவிளக்கு என்னும் தொடரைத் திரையுலகினர் படித்து எரிச்சல் அடைந்தனர். அந்தத் தொடர், விந்தனின் திரை உலக அனுபவங்களைப் படம் பிடித்துக் காட்டியது.

'தினமணி கதிர் பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராச பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர் விந்தன் அவர்களே. அதே போல நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் விந்தன் அவர்களே.