பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மு. பரமசிவம் :

பைர: மாரப்பா!

மார: ஆ!

பைரவனை மாரப்பனும் மாரப்பனை குள்ளனும் குத்திக்

கொன்று விடுகின்றனர். பல்லவ தூதன் சிறுத் தொண்டர் காதில் ஏதோ சொல்லுகிறான். அதைக் கேட்டு அவர்

விக்கிரமனை அழைக்கிறார்.

சிறு: விக்கிரமா... உன்னைச் சக்கரவர்த்தி உறையூருக்குக் கொண்டு போகும்படி கட்டளை யிட்டிருக்கிறார்.

விக்: எதற்காக?

சிறு: தேசப் பிரஷ்டனான நீ திரும்பி வந்தது

குற்றமாம்.

விக்: நான் திரும்பி வந்தது குற்றமானால், உங்கள் சக்கரவர்த்தி என்னைத் தேசப்பிரஷ்டம் செய்ததும் குற்றம்தான் என்று நான் சொன்னதாகப் போய்ச் சொல்லுங்கள்.

சிறு வீணாக ஆத்திரப்படாதே விக்கிரமா! இன்று நீ

புரிந்த மகத்தான வீரச் செயலை மன்னர் மன்னன் உணரும்போது அவருடைய மனம் மாறாமல் போகாது... போ... அவர் கட்டளைப்படி உறையூருக்குப் போ. நானும் உன் தாயாருடன் அங்கு வருகிறேன். (சமாதானம் செய்கிறார். விக்கிரமன் போகிறான்.)