பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 131

நர:

குந்:

நர:

குந்:

திருக்கிறேன். அதற்காகத்தான் உன்னையும் உறையூருக்கு அழைக்கிறேன்... வருகிறாயா குழந்தாய்? இதைக் கேட்டதும் குந்தவி தந்தையின் மடியில் தலை வைத்துக் கதறுகிறாள். என்னம்மா! உனக்கு ஏன் இந்தத் துக்கம்? மனதில் ஏதோ வைத்துக் கொண்டு சொல்லா மலிருக்கிறாய்... என்னிடம் மறைப்பானேன்?... எதுவாயிருந்தாலும் சொல்! சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்களே? நான் கோபித்துக் கொண்டால் உன்னை சமாதானம் செய்ய உன் அம்மாவா இருக்கிறாள்?... சொல்லம்மா, சொல். என்னை மன்னியுங்கள் அப்பா! என் கண்கள் செய்த குற்றம் அது. அன்றொரு நாள் காஞ்சி நகர் வீதியிலே அந்தச் சோழ ராஜகுமாரனை என கணகள கணடன. கணடதும அவா என கருத்திலே கலந்தார். அன்றிலிருந்து அவர் என் நெஞ்சிலே நின்றார். நினைவிலே இடம் பெற்றார். அதற்குப் பின் ஒருநாள் மகேந்திர மண்டபத்திலே காய்ச்சலால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவரை அதே கண்கள் கண்டன. கண்டதும் நீரைச் சொரிந்து நின்றன. உள்ளம் உருகிற்று. உணர்ச்சி அவரைப் பல்லக்கில் ஏற்றி உபசரித்தது... வசந்த மாளிகையிலே அவர் என் வாழ்வின்