பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மு. பரமசிவம் :

நர:

ஜீவனானார். நானும் அவருடைய வாழ்வின் ஜீவனானேன். எங்கிருந்ததோ வந்த மாரப்பன் எங்களைப் பிரித்தான். அவனிடமிருந்து அவரைத் தப்ப வைக்கப் பொன்னன் முயன்றான். உங்களிடமிருந்து அவரைத் தப்ப வைக்க நான் முயன்றேன். அதற்குள் நீங்கள் வந்து விட்டீர்கள்... எது எப்படியானாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அப்பா... தெரிந்தோ தெரியாமலோ அந்தச் சோழராஜகுமாரனை என் நாதனாக வரித்துவிட்ட நான், வேறொருவரை நெஞ்சத்தாலும் நினைக்க மாட்டேன். உள்ளத்தாலும் தீண்டமாட்டேன். அப்பா, இது சத்தியம்! கவலைப்படாதே குழந்தாய்... இந்த உலகில் அன்பு ஒன்றுதான் சாசுவதமானது... மற்றதெல்லாம் அநித்யம்... இரண்டு இளம் உள்ளங்கள் அன்பினால் ஒன்று சேரும்போது அங்கே அன்பு வடிவமான கடவுளே சாந்நித்யமாயிருக்கிறான்... அவ்விதம் அன்பினால் சேர்ந்த உள்ளங்களுக்கு மத்தியில் நின்று தடை செய்ய யாருக்குமே பாத்தியதை கிடையாது. தாய் தகப்பனுக்குக் கூடக் கிடையாதுதான்...

ஆனால் குழந்தாய். உனக்காகப் புகழ்பெற்ற பல்லவ குலத்தின் ராஜநீதியை மட்டும் என்னால் கைவிட முடியாது. அவன் செய்த குற்றத்துக்குத் தகுந்த தண்டனையும் அளிப்பேன். அதற்குப் பிறகும் நீ அவனை