பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மு. பரமசிவம் :

தோழர் அதற்குப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறார்.

ஒரு: யார் இந்தப் பெரியவர்? இன்: விக்கிரம சோழர் விஷயத்தில் இவர் பொறுப்பு

ஏற்றுக் கொள்ளக் காரணம்?

சிறு: சொல்லுகிறேன் சபையோர்களே, சொல்லுகிறேன். அன்பு மட்டும் மனிதனை அடிமையாக்குவதில்லை. வீரமும் மனிதனை அடிமையாக்கி விடுகிறது என்பதற்கு உதாரண புருஷராக விளங்குபவர் இந்தச் சிவனடியார். இல்லை யென்றால் போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைவதற்கு முன்னால் பார்த்திப சோழரை இவர் பார்த்திருக்க மாட்டார். உங்கள் கனவை நனவாக்குகிறேன் என்று அவர் மடிவதற்கு முன்னால் உறுதியளித்திருக்க மாட்டார். சிராப்பள்ளி மலை கொடிப் போரிலும், காஞ்சி அரசவையிலும் விக்கிரம சோழர் காட்டிய வீரத்தைக் கண்டு சிந்தை குளிர்ந்திருக்க மாட்டார். கரிகாலச் சோழர் கண்ட கன்னித் தீவுகளிலே பகைக்கஞ்சி வாழ்ந்த பழந்தமிழர் துயர்போக்கித் தலைக்கஞ்சேன், தாயின் துயர் தீர்ப்பேன்... என்று வந்த தனயனைத் தடுத்தாட் கொண்டிருக்க மாட்டார்.

கடலில் மூழ்கிக் கபால பைரவனின் சூழ்ச்சிக் கிரையாகி, கண் கானா இடத்தில் புண்பட்ட மனத்துடன் புலம்பிக் கொண்டிருந்த பார்த்திய மன்னரின் பத்தினியைக் காப்பாற்றப் போய், தம் உயிரையே பலி பீடத்தில் பணயம் வைத்திருக்க மாட்டார்.