பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மு. பரமசிவம் *

சிறு:

குரல்:

ረቻööጋ{ { :

நரசிம்:

சபையோர்களே! இன்னும் ஒரு காரியம் இருக்கிறது. மாமல்ல சக்கரவர்த்தி தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து விக்கிரம சோழரின் குற்றத்தைப் பற்றி முடிவான தீர்ப்பளிப்பார்.

கனவு பலித்தது

சக்ரவர்த்தி கோலத்தில் நரசிம்மவர்மர் வந்து அமருகிறார். தர்ம ராஜாதி ராஜ மாமல்ல பல்லவ சக்கரவர்த்தி வாழ்க!

ஜயவிஜயீ பவ! ஜய விஜயீ பவ!

விக்கிரம சோழரைப் பற்றி உங்களுடைய அபிப்ராயம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டேன். தேசப்பிரஷ்ட தண்டனைக் குள்ளானவர்கள் திரும்பி வந்தால், அதற்குத் தண்டனை சிரசாக்கினை தான் கொடுத்தாக வேண்டும். அந்தத் தண்டனையைக் கொடுப் பதற்கு முன்னால் இன்னொரு தண்டனை யையும் நான் இவருக்குக் கொடுக்க வேண்டி யிருக்கிறது. அதுதான் ஜன்ம தண்டனை.

இதோ இளவரசர் விக்கிரமருக்காகப் போலிச் சிவனடியாரைக் கண்டுபிடித்து அவருடைய பொய் ஜடா மகுடத்தைப் பிய்த்தெறி வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த என் அருமை மகள் குந்தவியைக் கல்யாணம் செய்துகொண்டு கடைசிவரை கட்டிக் காக்க வேண்டுமென்ற ஜன்ம தண்டனையை