பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 137

இவருக்கு அளிக்கிறேன். அத்துடன் புராதன சோழ மகுடத்தை விக்கிரமசோழர் இனிமேல் தனியாகவே தாங்க வேண்டுமென்ற சிராசாக் கினையையும் நான் இவருக்கு விதிக்கிறேன்.

பொன். விக்கிரம சோழ மகாராஜா வாழ்க! எல்: ஜய விஜயீ பவ!

சிம்மாசனத்தில் விக்கிரமனும் குந்தவியும் முடிசூடியும், மாலை சூடியும் உட்கார்ந்திருக்கின்றனர். அருகில் நரசிம்ம சக்கரவர்த்தி முதலியோர் இருக்கின்றனர். இரண்டு பெண்கள் ஆரத்தி எடுத்துச் சென்ற பின்னர் நரசிம்ம வர்மர் விக்கிரமனிடம் கூறுகிறார்.

நர: குழந்தாய்... எக்காலத்துக்கும் பார்த்திப மகாராஜாவின் புதல்வன் என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்து கொள் வாயாக! அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்.

ஆசீர்வதிக்கிறார். விக்கிரமன் குந்தவி எழுந்து அவரை வணங்குகின்றனர்.

பார்த்திப மகாராஜாவின் கனவு பல ஆண்டுகளுக்குப் பிறகு பலித்தது. விக்கிரமன் புலிக் கொடியை ஏற்றிப் பிடித்து, சுயேச்சை மன்னனானான். அவனுக்குப் பின்னர், பல காலம் கழித்து சோழ சிம்மாசன மேறிய ராஜராஜ சோழனும், அவனது மகன் ராஜேந்திர சோழனும் பார்த்திபன் கண்ட கனவை நினைவாக்கினார்கள். புலிக்கொடி தரணியெங்கும் தன்னிகரில்லா ஆட்சி செலுத்தியது.