பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

140 மு. பரமசிவம் :

மக்களுக்கு முன்பாக மண்டபத்தின் மீதிருந்து பேசிக் கொண்டிருந்தார் மன்னன். திடீரென்று மண்டபம் வெடித்துச் சிதறியது. அரசனும் அரசியும் போன இடம் தெரியவில்லை!

மந்திரி யாயிருந்த சொல்லேந்தி மன்னனாக முடி சூட்டிக் கொண்டான்.

வெடி விபத்திலே சிக்கிய அரசி ஒரு கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் திரும்பி வருவார் என்று மக்களிடம் கூறி, அங்கேயே தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

சொல்லேந்தியின் ஆட்சியில் வரி என்னும் பெயரால் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். எதிர்த்துப் பேச எவருக்கும் துணிவில்லை, ஒருவனைத் தவிர. அவன்தான் பத்தே வயதான தேன்மொழியின் வீரப்புதல்வன் வில்லேந்தி. 'மன்னன் ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை நிலைநாட்டுவதே தன் இலட்சியம் என்று வீர முழக்கமிட்டான் அந்த இளஞ் சிங்கம். அவனைப் பிடித்து பாதாளச் சிறையில் தள்ளினான் கொடுங்கோலன்.

அன்றுதான் தந்தையைப் பற்றிய ரகசியத்தை வில்லேந்தியிடம் கூற வேண்டிய நாள் பொங்கல் திருநாள்.

சூரியன் மறைவதற்குள் ரகசியத்தை மகனிடம் கூறவேண்டுமே என்று தேன்மொழி துடியாய்த்