பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையு, ல்ெ விந்தன் 141

துடித்தாள். சிறையிலிருந்து தப்பித்து வீட்டை நோக்கிப் பறந்தான் வில்லேந்தி. தாயார் ரகசியத்தை அவனிடம் கூற முயன்றாள். ஆனால்... அது மறந்து போய்விட்டது. ஆமாம்; அதற்குள் சூரியன் மறைந்துவிட்டான். நெஞ்சு வெடிக்கக் கத்தினாள் தேன்மொழி. அன்னையின் இழந்த ஞாபக சக்தியைத் திரும்பக் கொண்டுவரும் இரத்தினத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தேடிப் புறப்பட்டான் வில்லேந்தி.

வெற்றியோடு திரும்பி வந்த மகனுக்குக் கிடைத்த வரவேற்பு தாயார் கொடுங்கோலன் சொல்லேந்தியால் கைது செய்யப்பட்டுச் சிறையிலே கிடக்கிறாள் என்பதுதான். தாயை விடுவிக்கக் கிளம்பினான் வில்லேந்தி. அவனையும் கைது செய்ய வந்தார்கள் சிப்பாய்கள். தங்கள் நண்பனைக் காப்பாற்ற, "நான் தான் வில்லேந்தி; நான்தான் வில்லேந்தி!' என்று அந்தக் கிராமத்திலுள்ள அத்தனைச் சிறுவர்களும் கூச்சலிட்டார்கள். குழப்ப மடைந்த சிப்பாய்கள் எல்லாரையும் அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

வில்லேந்தியைக் கண்டுபிடிக்க மன்னனின் மூளையில் ஒரு யோசனை உதித்தது. சிறையில் கிடக்கும் தேன்மொழியை இழுத்து வர உத்தர விட்டான். மகனைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்பதற்காகத் தன் கண்களையே போக்கிக் கொண்டாள் அன்னை அப்படியே அவளை இழுத்து வர உத்தர விட்டான் சொல்லேந்தி.