பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மு. பரமசிவம் *

கண்ணிழந்த தாயைக் கண்ட வில்லேந்தி, தாவிப் பறந்து தாயைக் கட்டிக்கொண்டு அலறினான். அவர்கள் இருவரையும் அடுத்த நாள் காலையில் தீக்கிரையாக்கும்படி உத்தரவிட்டான் அரக்கன் சொல்லேந்தி.

பொழுது விடிந்தது. தாயையும் மகனையும் விறகுக் குவியனுக்கு நடுவே நிறுத்தித் தீ வைக்க முனைந் தார்கள். திடீரென்று ஆயிரமாயிரம் குழந்தைகள் தோன்றினார்கள் அங்கே! சொல்லேந்தியின் சூழ்ச்சிகளை யெல்லாம் தகர்த்தெறிந்தார்கள்...

குழந்தைகள் கண்ட குடியரசு மாயாபுரி மக்களின் மணி அரசாகியது. மங்களம்.

'குழந்தைகள் கண்ட குடியரசு சிறுவர்களுக்கு வீரத்தை உண்டாக்கும் ஒரு கற்பனைக் கதை. ஆரம்ப காலத்தில் 'பாப்பா மலர் பகுதிக்குக் கதைகள் எழுதி பக்குவப்பட்ட விந்தன் இப்படத்திற்குச் சிறப்பான முறையில் வசனம் எழுதினார். படமும் ஓரளவு வெற்றி பெற்றது.

சினிமாத் துறையை விந்தன் மறக்கா விட்டாலும், அவரைச் சினிமாத் துறை இத்துடன் கை விட்டு விட்டது!

大 大 大

சினிமாவில் 'கதைச் சொல்லிகள் ஏராளம் பேர். சினிமாவில் காபி கொடுக்கும் வேலை கிடைத்தாலும்