பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 143

போதும் என்று உள்ளே நுழைந்தவர்கள் பலர் இன்று சினிமா தயாரிப்பாளர்களாகவும், கதாசிரியர்களாகவும், இயக்குநர்களாகவும் மாறிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் விந்தன் என்ன செய்ய முடியும்?

விந்தனுக்கு கதை மட்டுமே எழுதத் தெரியும். வேறு என்ன தெரிந்திருக்க வேண்டும்? அவருக்கு முதலில் கதை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் கதையை விதவிதமாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். முதலில் கதாநாயகனுக்கு ஏற்ற மாதிரி, அவர் இரண்டு மூன்று பெண்களைக் காதலிக்கிற மாதிரி, அதற்கும் மேலே கதாநாயகன் வீட்டுக்குப் போய் கதை சொல்ல வேண்டும்.

இந்த முறையெல்லாம் கேட்பதற்கே விந்தனுக்கு அருவருப்பாக இருந்தது. அவர் சினிமாவிற்குக் கதை எழுத மறந்துவிட்டார் என்று ஒரே வரியில் சொல்லி முடித்து விடலாம். ஆனால் அப்படி செய்யவில்லை விந்தன். அவருக்கு சினிமா மயக்கம் இருந்தது .

சினிமாவில் விந்தனுக்கு இருந்த மயக்கம் அவரை சும்மா விடவில்லை. சொந்தமாக சினிமா கம்பெனி ஆரம்பிக்கத் தூண்டியது, புதுமைப்பித்தன் 'தினகரி பிலிம்ஸ் ஆரம்பித்ததுபோல.

சுயமரியாதைக்காரரான விந்தன் அத்துறையில் சுடர்விட முடியாமல் போனது அவருக்கு ஒரு வகையில் வெற்றி என்றே கருதலாம். ஆம், சினிமாவிற்கு அவராக வரவில்லை; அழைத்து வந்தார்கள்.