பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4×

144 மு. பரமசிவம் *

அத்துடன் அவர் சினிமா கம்பெனி அறையில் அமர்ந்து வசனங்களை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர். ஏதேனும் மாற்றம் திருத்தம் இருந்தால் அதையும் அறையில் இருந்தபடியே எழுதிக் கொடுப்பார்.

சினிமாவில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை தரப்படுகிறது என்பதை அவர் தெரிந்து வைத்தி ருந்தார். இளங்கோவன் எழுதிய இடத்தில் அவருக்கு தான் முதல் மரியாதை. அவருக்கு முன்னால் எவரும் உட்காரமாட்டார்கள். புகை புகைக்க மாட்டார்கள். அவர் சொல்வதை, எழுதுவதை வேதமாகக் கருதினார்கள். அப்படிப்பட்டவர் நடிகர்களின் ஆதிக்கம் வளர்ந்த காலத்தில் அவரே பின்வாங்கி விட்டார். பின்னர் சினிமாவே அவரை மறந்துவிட்டது!

சினிமாவில் நடிகர்கள் ஆதிக்கம் பெருகி விட்டதை எண்ணிப் பார்த்து வருத்தப்படும் எழுத்தாளர்களுக்கு விரைவில் ஒரு முடிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

விந்தனுக்கு சினிமா உலகம் கதவை மூடிக் கொண்டாலும், அவருடைய நோக்கங்கள், போக்குகள் அங்கே அரங்கேறின. அதன் காரணமாகப் பல இளம் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சிலர் வீறுடன் நின்று வெற்றி கண்டனர். அவர்கள் மூலம் எழுத்தாளனின் சுயமரியாதை காப்பாற்றப் பட்டது என்று சொல்லலாம்.