பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 13

என்னுரை

ம்ேபது ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1951ஆம் ஆண்டு சினிமாத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எழுத்தாளர் விந்தன்,1960ஆம் ஆண்டு வரையில் ஏழு திரைப்படங்களுக்குக் கதைவசனம் எழுதியதோடு ஆறு பாடல்களையும் எழுதியுள்ளார்.

பத்தாண்டுகள் சினிமாவில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகப் பணியாற்றியுள்ள விந்தனைப்பற்றி சினிமாவில், சினிமாப் பத்திரிகைகளில் செய்திகள் இல்லை, பரபரப்பாக.

சினிமாவில் எழுத்தாளர் விந்தனுக்குக் கிடைத்த அவமானங்கள், சுயமரியாதை இழப்புகள், மனித நேயமற்ற பண்புகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்; மெளனப்புரட்சி மூலம்.

விந்தன் வசனம் எழுதிய வாழப்பிறந்தவள், அன்பு, கூண்டுக்கிளி ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்த போதிலும் நடிகர்களின் ஆதிக்கத்தால் விநதன் பெயர் மறைந்துவிட்டது.

சினிமாவில் எடுபிடிகள் எழுத்தாளர்களாக அவதாரம் எடுத்ததால் உண்மையான இலக்கிய வாதிகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது!

இத்தகைய சூழலில் புகழ்பெற்ற சினிமா நடிகை

நடிகர்கள் பற்றி, அவர்களின் முதுகுகள் இதமாகச் சொறியும் வகையில் அவர்கள் இந்திரன் சந்திரன்