பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மு. பரமசிவம் :

12

Tெழுத்தாளர்கள் பலர் ஆரம்பத்தில் கவிதை எழுதவே பழகினார்கள். விந்தனும் ஆரம்பத்தில் கவிதை எழுதப் பழகியவர்தான்.

சுதேசமித்திரன் பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் அந்தக் கவிதை உள்ளத்தோடு 'கல்கி" பத்திரிகையில் குட்டிக் கதைகள் எழுதினார். சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் அளித்த கல்கி'யில் விந்தனும் கதைகளே எழுதினார். எனினும் அவருடைய கதைகளில் குறிப்பாக,பாலும் பாவையும் நாவலில் பல இடங்களில் கவிதை நயத்தோடு வசனங்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.

விந்தன் சினிமாவுக்குப் பாட்டு எழுத வந்த காலத்தில் கண்ணதாசன் பிரபலம் ஆவில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமாவுக்கு வராத காலம்.

அன்பு படத்தில் விந்தன் நாற்பது வரிகள் கொண்ட ஒரு நீண்ட பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாடல் மெட்டுக்காக எழுதிய பாடலாகத் தெரிய வில்லை. பாடலுக்குத் தனியாக மெட்டமைத்ததாகத் தான் தெரிகிறது.