பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+

  • திரையுலகில் விந்தன் 15,

இந்த இடத்தில் ஒரு தகவல். கவிஞர் தமிழ்ஒளியை ஒரு பத்திரிகை ஆசிரியர், 'மாதம் ஒரு கதை எழுதுங்கள்; பணம் அதிகம் கிடைக்கும்' என்றார். பத்திரிகை ஆசிரியரின் நல்ல மனத்தைப் புரிந்து கொள்ளாத கவிஞர், என் கவிதை ஆற்றலை முடக்க முயற்சிக்கிறார் என்று முரட்டுத்தனமாக அந்தப் பத்திரிகைக்குக் கதையோ கவிதையோ எழுதுவதை அடியோடு நிறுத்திவிட்டார்.

'கவிஞர் தமிழ்ஒளி கவிதை எழுதுவது போல் கதையும் நன்றாக எழுதுவார். அதனால்தான் சொன்னேன் என்று பத்திரிகை ஆசிரியர் வருத்தப்

L ii. _L_fTfT.

சிறந்த சிறுகதை ஆசிரியரான விந்தன், ஆசிரியரின் கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் 'பாட்டில் பாரதம் காவியத்தைப் பலர் பாராட்டும்படி எழுதினார். 'தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் எவரையும் எளிதில் பாராட்டமாட்டார். அப்படிப்பட்டவர் வாரா வாரம் வெளிவந்த பாட்டில் பாரதம் தொடரைப் படித்து விட்டு விந்தனை வெகுவாகப் பாராட்டுவாராம்.

பெரியார் ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கொள்கை யிலும் பொதுவுடைமைக் கருத்துக்களிலும் ஆழ்ந்த பற்றுடைய விந்தன், கல்கியில் ராஜாஜி எழுதிய பஜகோவிந்தம் என்ற புத்தகத்துக்கு மறுப்பாக, மக்கள் விழிப்படைந்து பகுத்தறிவு பெறுவதற்கு ஏதுவாகப் 'பசிகோவிந்தம்' என்ற புத்தகத்தை எள்ளல் தன்மையுடன் கவிதையில் எழுதினார்.